வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படத்தை நிச்சயம் எடுப்பேன் – இயக்குநர் பொன்ராம்
Varuthapadatha Valibar Sangam 2: தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் பொன்ராம் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் திருத்தம். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் பொன் ராம். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் பொன் ராம் இயக்கிய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் முக்கியப் படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்திகேயனுடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ஸ்ரீ திவ்யா, சூரி, சௌந்தரராஜா, ஷாலு ஷம்மு, ராஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, சுவாமிநாதன், இளங்கோ குமரவேல், யார் கண்ணன், காதல் தண்டபாணி, தவசி, சுப்பிரமணியபுரம் ராஜா, நாடோடிகள் கோபால், வணக்கம் கந்தசாமி, வினோதினி வைத்தியநாதன், ஜோ மல்லூரி, சூப்பர் குட் சுப்ரமணி, பிந்து மாதவி, பாபா பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பொன்ராம் அடுத்தடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ரஜினிமுருகன் மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கினார். அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டிஎஸ்பி ஆகியப் படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் தற்போது இயக்குநர் பொன்ராம் இயக்கி உள்ள படம் கொம்பு சீவி. இந்தப் படத்தில் நடிகர் சண்முகப்பாண்டியன் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 19-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படத்தை நிச்சயம் எடுப்பேன்:
இந்த நிலையில் இந்த கொம்புசீவி படத்தின் விழாவில் பேசிய இயக்குநர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் குறித்து பேசியுள்ளார். மேலும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கதை தயாராகிவிட்டது. சிவகார்த்திகேயனின் வளர்ச்சி, வணிகத் திட்டங்கள் மற்றும் ஒட்டுமொத்த சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் திரைப்படத்தை வடிவமைக்க வேண்டும் என்றும் இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் கவனம் பெரும் எக்ஸ் தள பதிவு:
Director Ponram – Recent Interview
🎬 I will definitely make #VaruthapadathaValibarSangam Part 2.
📝 The script is ready. I have to shape the film according to #Sivakarthikeyan‘s growth, business plans, and overall market expectations.
⚙️ Some work related to that is currently… pic.twitter.com/AHlxv744ty— Movie Tamil (@_MovieTamil) December 11, 2025
Also Read… நாகார்ஜுனா சார் ஏன் வயதாகாமல் இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை – விஜய் சேதுபதி