சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் இப்படிதான் இருக்கும்… வைரலாகும் தகவல்
Sivakarthikeyan 26 Movie: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அவரது 25-வது படம் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைக்க உள்ளார். இது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களின் ஒருவர் இயக்குநர் வெங்கட் பிரபு. சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது இயக்குநராக வலம் வருகிறார் வெங்கட் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா, மங்காத்தா, மாநாடு, மன்மத லீலை, கஸ்டடி மற்றும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஆகியப் படங்களை இயக்கி உள்ளார். மேலும் இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் காமெடியை மையமாக வைத்து வெளியாவதால் ரசிகர்கள் தொடர்ந்து இவரது படங்களைக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு எழுதி இயக்கிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்.
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் சிவகார்திகேயனின் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து சில பேட்டிகளில் இந்த கூட்டணி குறித்து வெங்கட் பிரபு வெளிப்படையாக பேசி இருந்தார்.




சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் உருவாகும் SK 26:
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அவரது 25-வது படமான பராசக்தி படத்தில் பிசியாக பணியாற்றி வருகிறார். இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாக உள்ளது என்று தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… பைசன் காளமாடன் படத்தை வெகுவாகப் பாராட்டிய பிரகாஷ் ராஜ் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Thalapathy68 – #SK26#VenkatPrabhu’s 13th film will be a sci-fi entertainer starring #Sivakarthikeyan! ✨️
After exploring cloning in #TheGOAT, he’s now diving into the world of time travel 🎬 pic.twitter.com/cTYT6ZqK8j
— Movie Tamil (@_MovieTamil) December 8, 2025
Also Read… இந்தியில் ரீமேக் ஆகும் மோகன்லால் நடிப்பில் ஹிட் அடித்த துடரும் படம்!