வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு.. 4 ஆண்டுகளைக் கடந்தது சிம்புவின் மாநாடு படம் – இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி
4 Years Of Maanaadu Movie: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மாநாடு. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 25-ம் தேதி நவம்பர் மாதம் 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு. சயின்ஸ் ஃபிக்ஷன் பொலிட்டிகள் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த மாநாடு படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்து இருந்தார். இயக்குநர் வெங்கட் பிரபு எழுதி இயக்கிய இந்தப் படத்தில் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், மனோஜ் பாரதிராஜா, வாகை சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி அமரன், சுப்பு பஞ்சு, கருணாகரன், அஞ்சேனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ், உதயா, டேனியல் அன்னி போப், படவா கோபி, ஸ்டண்ட் சில்வா, சிங்கப்பூர் பாலா, கிருபா, அருண் மோகன், மஹத் ராகவேந்திரா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
சிலம்பரசன் நடிப்பில் வெளியான இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வி ஹவுஸ் புரடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




இந்தப் படம் நிச்சயமாக வெற்றியடையும் என்று நினைத்தோம்:
இந்த அற்புதமான மாநாடு என்ற டைம்-லூப் படத்தை எடுத்தபோது, நமது மக்கள் அதைப் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன்… மக்கள் அனைவரும் நாங்கள் நினைத்ததை விட அதிகமாக வரவேற்றார்கள்! சினிமாவில் சோதனைகளைக் கொண்டாடியதற்கு நன்றி. நீங்கள் எங்களை எல்லைகளைத் தாண்டச் செய்கிறீர்கள்.. நம்பிக்கைக்கு நன்றி சிலம்பரசன், சுரேஷ் காமாட்சி, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், யுவன் சங்கர் ராஜா, மற்றும் எனது குழுவினர் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.
Also Read… ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருதை வென்றார் நடிகர் அஜித்குமார்
இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
When we made this crazy time-loop film #Maanaadu, I believed one thing for sure that our audience will get it…And you all got it MORE than we imagined!
Thank you for celebrating experiments in cinema. You make us push boundaries.. thanks for the belief @SilambarasanTR_… pic.twitter.com/1ovVaCvnpY— venkat prabhu (@vp_offl) November 25, 2025
Also Read… வடசென்னை மற்றும் அரசன் படங்கள் குறித்து ரசிகரின் ஒப்பீடு – வியந்து பேசிய வெற்றிமாறன்