தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் காரணம்… ஓபிஎஸ் புகழாரம்!
O Panneerselvam speech: திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்று பேசியிருந்தார். இதில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் காரணம் என தெரிவித்தார். மேலும், எடப்பாடியை கடுமையாக விமர்சித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று சனிக்கிழமை (மார்ச் 14) பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு தர மறுத்து வருகிறது. தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு செல்லும் வரியில் சுமார் 40 சதவீதம் தமிழகத்துக்கு வர வேண்டும். ஆனால், வெறும் 4 சதவீதம் மட்டுமே தமிழக அரசுக்கு, மத்திய அரசு தருகிறது. மத்திய நிதி வரவில்லை என்றாலும், தமிழக மக்களுக்கு தேவையான நிதியை வழங்குவதற்கான ஆட்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கி வருகிறார். தமிழகத்தில் மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் திமுக அரசு செய்து கொடுத்ததன் காரணமாக, பட்டப்படிப்பு முடித்த மாணவர்களின் எண்ணிக்கை 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. மற்றும் மாநிலங்களில் 30 சதவீதத்தை தாண்ட முடியாத நிலையில் தமிழகம் 52 சதவீதமாக இருந்து வருகிறது.
அதிக தொழிற்சாலைகள் உடைய மாநிலமாக தமிழகம் முதல்நிலை
இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலை உடைய மாநிலமாக தமிழகம் இருப்பதற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் தான் காரணம். தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்த்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் மகளிருக்கு எதிர்காலத்தில் வழங்கக்கூடிய ரூ.3000 மற்றும் கோடைகால சிறப்பு நிதியாக ரூ.2000 என மொத்தம் ரூ.5000 த்தை முன்கூட்டியே முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கி அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளார்.
மேலும் படிக்க: கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி விபத்து – கரூர் அருகே பரபரப்பு




அரசியல் களத்தில் நன்றி மறந்த நபர்
தமிழக அரசியல் களத்தில் நன்றி மறந்த ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஊர்ந்து ஊர்ந்து சென்று முதலமைச்சர் பதவியை அடைந்த பின்னர், அந்த முதலமைச்சரையே யார் என்று கேட்டவர். இப்படி ஒரு நன்றி கெட்ட நபர் அரசியல் இருக்கிறார் என்று சொன்னால் அவரை துடைத்து எரியக்கூடிய சக்தி உங்களிடம் மட்டுமே உள்ளது. அவரது 4 ஆண்டு கால ஆட்சியை காப்பாற்றியது நான் தான். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது என்னுடன் இருந்தவர்கள் அதை எதிர்த்து வாக்களித்ததால் 5 வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
அரசியலில் நான் செய்த மிகப்பெரிய தவறு
நான் எதிர்த்திருந்தால் அவரது ஆட்சி கலைந்திருக்கும். எனது காலில் விழுந்து ஆதரவு கேட்டால். நான் எதுவும் செய்யவில்லை. இதுவே நான் அரசியலில் செய்த மிகப்பெரிய தவறாகும். 4 ஆண்டு கால ஆட்சியில் என்னை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது மட்டுமே அவரது சிந்தனையாக இருந்தது. வேறு எதுவுமே அவர் செய்யவில்லை என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
மேலும் படிக்க: பாசி பிடித்த தண்ணீர் கேன் விற்றால் ரூ.5,000 அபராதம்: கடும் எச்சரிக்கை