AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி விபத்து – கரூர் அருகே பரபரப்பு

கரூர் மாவட்டம் வெள்ளியனையில் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 18 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே டிராக்கில் கல்லூரி பேருந்து சிக்கிய நிலையில், அந்த வழியாக ஜல்லி ஏற்றி சென்ற சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி விபத்து – கரூர் அருகே பரபரப்பு
கல்லூரி பேருந்து விபத்து
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Mar 2026 20:53 PM IST

கரூர், மார்ச் 14: கரூர் மாவட்டம் வெள்ளியனையில் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 18 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே டிராக்கில் கல்லூரி பேருந்து சிக்கிய நிலையில், அந்த வழியாக ஜல்லி ஏற்றி சென்ற சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. தற்போது பேருந்தில் இருந்த மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி விபத்து

கரூர் மாவட்டம் வெள்ளியைணை என்ற பகுதியில் ரயில்வே டிராக்கில் மார்ச் 14, 2026 அன்று மாலை கல்லூரி பேருந்து ஒன்று நகர முடியாமல் சிக்கியுள்ளது. இந்த நிலையில் அந்த வழியாக வந்த சரக்கு ரயில் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் எதிர்பாராத விதமாக கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 18 மாணவர்கள் காயமடந்தனர். இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா?

இந்த ரயில் வரும்போது ரயில்வே கேட் எப்படி திறந்திருந்ததா ? ஒருவேளை ரயில்வே கேட் மூடியிருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்குமா என்ற கேள்வியும் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் இந்த விபத்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவில், தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் கவனமாக இருந்திருந்தால், இத்தகைய விபத்து நடந்திருக்காது. இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் விரைவில் பூரண நலம்பெற விரும்புகிறேன். அவர்களுக்கு உடனடியாக சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இத்தகைய விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க ரயில்வே கடப்பு பாதைகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளை வலுப்படுத்த ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க : கரூர் வழக்கு.. டெல்லி புறப்பட்ட விஜய்.. சிபிஐ விசாரணைக்கு மத்தியில் கூட்டணி பேச்சுவார்த்தை?

விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த விபத்து ஓட்டுநரின் அலட்சியத்தால் நடந்ததா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us