மக்களே உஷார்! டாக்டர் போல நடித்து நூதன திருட்டு – அரசு மருத்துவமனையில் பரபரப்பு சம்பவம்
Hospital Theft Case : சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டாக்டர் போல நடித்து நோயாளியிடம் இருந்து நகை மற்றும் மொபைல் போனை திருடிய வழக்கில் காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நோயாளிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை, மார்ச் 14 : அரசு மருத்துவமனையில் டாக்டர் போல நடித்து நோயாளியிடம் இருந்து நகை மற்றும் மொபைல் போனை திருடிய வழக்கில் காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். சென்னை கொளத்தூரை சேர்ந்த காஞ்சனா கடந்த மார்ச் 6, 2026 அன்று தனது உறவினருடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். இந்தத நிலையில் உறவினருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அதற்காக மயக்கவியல் நிபுணரை பார்க்குமாறும் காஞ்சனாவிற்கு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தன்னை மருத்துவர் எனவும் அவரது உறவினருக்கு அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகவும் ஒருவர் காஞ்சனாவிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
டாக்டர் போல நடித்து நூதன திருட்டு
பின்னர் காஞ்சனா தனது உறவினரின் மருத்துவ ஆவணங்களை காண்பித்துள்ளார். அதை பார்த்த அந்த பர் மீண்டும் நாளை வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த நபர், காஞ்சனாவிடம் மருந்துகள் வாங்க வேண்டும் என ஏழாவது தளத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஸ்கேன் சென்டருக்கு அழைத்து சென்ற அவர், காஞ்சனாவையும் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். அதற்கு காஞ்சனா சம்மதிக்கவே ஸ்கேன் எடுக்கும் முன் நகைகளை அணிய கூடாது என ஒரு பையில் போட்டு வெளியே வைக்குமாறும் கூறியிருக்கிறார்.
இதையும் படிக்க : சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் முடக்கம்.. காய்கறிகள் தேக்கம்.. விலையும் கடும் சரிவு!




அதனைக் கேட்டு காஞ்சனாவும் தான் அணிந்திருந்த தாலி, மோதிரம் உள்ளிட்ட நகைகளையும் செல்போனையும் ஒரு பையில் போட்டு கொடுத்துள்ளார். இதனையடுத்து அதனை வாங்கிய அவர் தனது அறையில் பத்திரமாக வைத்துவிட்டு வருகிறேன் என்று கூறி வாங்கி சென்றுள்ளார். இந்த நிலையில் நெடுநேரமாகியும் அவர் வராததால் பதற்றம் அடைந்த காஞ்சனா அவரை தேடி சென்றுள்ளார்.
அப்போது தான் தன்னிடம் நகைகளை வாங்கிய நபர் மருத்துவரே இல்லை என்ற உண்மை காஞ்சனாவிற்கு தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த காஞ்சனா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.\
இதையும் படிக்க : வீட்டில் இருந்த நகையை காதலனுக்கு கொடுத்த மாணவி… திருப்பி கேட்டதால் தாய்க்கு நேர்ந்த கொடூர தாக்குதல்!
இந்த நிலையில் காவல்துறையினரின் விசாரணையில் காஞ்சனாவை ஏமாற்றியது கோயம்புத்தூரை சேர்ந்த ராஜேஷ் பிரித்வி மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த அரவிந்தன் என்பதும் தெரியவந்தது. இதனையடு்து இருவரையும் சென்னையில் வைத்து கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சனாவின் நகைகளை வைத்து இருவரும் தங்க நாணயங்கள் செய்ததும் பழைய கார் ஒன்றை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து தங்க நாணயங்கள் மற்றும் காரைகாவல்துறையினர்