AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் முடக்கம்.. காய்கறிகள் தேக்கம்.. விலையும் கடும் சரிவு!

இந்த நிச்சயமற்ற சூழல், ஹோட்டல் நிர்வாகங்களின் அன்றாட செயல்பாடுகளைப் பெரிதும் முடக்கியுள்ளது. இதனால் வணிக சிலிண்டரை நம்பியிருக்கும் ஹோட்டல்களும் உணவை தயாரிக்க முடியாமல் கடைகளை மூடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலிண்டர் விலை உயர்வு ஒருபுறம் இருக்க, உணவு வகைகளின், சமையல் எண்ணெய் என பல்வேறு பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் முடக்கம்.. காய்கறிகள் தேக்கம்.. விலையும் கடும் சரிவு!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 Mar 2026 10:51 AM IST

சென்னை, மார்ச் 14: ஈரான்-இஸ்ரேல் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிசக்தி சந்தையில் நிலவும் குழப்பம், தமிழகத்தின் ஹோட்டல் தொழில்துறையை நேரடியாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, வணிக பயன்பாட்டுக்கான (Commercial) எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஹோட்டல் உரிமையாளர்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கேஸ் சிலிண்டர் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ செயலிகள் (App) வழியாகக் கூட முன்பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தட்டுப்பாடு காரணமாக முன்னதாகச் செய்யப்பட்ட முன்பதிவுகளைக் கூட உறுதி செய்ய முடியாத நிலையில் கேஸ் ஏஜென்சிகள் உள்ளதால், உரிமையாளர்கள் நேரடியாக ஏஜென்சிகளை அணுக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிச்சயமற்ற சூழல், ஹோட்டல் நிர்வாகங்களின் அன்றாட செயல்பாடுகளைப் பெரிதும் முடக்கியுள்ளது.

இதையும் படிக்க: டீ-காபி பிரியர்களுக்கு பேரதிர்ச்சி… நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு விலை உயர்வு!

விலைவாசி உயர்வு:

இதனால் வணிக சிலிண்டரை நம்பியிருக்கும் ஹோட்டல்களும் உணவை தயாரிக்க முடியாமல் கடைகளை மூடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலிண்டர் விலை உயர்வு ஒருபுறம் இருக்க, உணவு வகைகளின், சமையல் எண்ணெய் என பல்வேறு பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இது குறித்துக் கூறுகையில், “சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் வணிகச் செலவுகள் அதிகரித்துள்ளதால், அதன் சுமையை ஈடுகட்ட வேண்டிய கட்டாயத்தில் ஹோட்டல் உணவுகளின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மூட்டை மூட்டையாக தேக்கம்:

அதேபோல், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலும் பிரதிபலித்திருக்கிறது. ஹோட்டல்கள் அடைக்கப்பட்டிருப்பதால், ‘ஆர்டர்’ இல்லாமல் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் தேங்கி கிடக்கின்றன. பெருமளவில் காய்கறி வாங்கக்கூடிய ஹோட்டல்கள் அதற்கான ஆர்டரை கொடுக்காததால், கோயம்பேடு மார்க்கெட் மொத்த கடைகளின் முன்பு மூட்டை, மூட்டையாக காய்கறிகள் தேக்கம் அடைந்திருக்கிறது.

விலை கடும் சரிவு:

ஏற்கனவே வரத்து அதிகமாக இருப்பதால் குறைந்திருந்த காய்கறிகளின் விலை, தற்போது காய்கறிகள் தேக்கம் அடைந்திருப்பதால், மேலும் விலை சரிந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.15 வரை விற்கப்பட்டது. முட்டைக்கோஸ், உருளை கிழங்கு, சௌசௌ, முள்ளங்கி, சுரைக்காய் உள்ளிட்டவைகளின் விலையும் சரிந்து இருக்கிறது.

காய்கறி விலை நிலவரம்:

சென்னையில் ஹோட்டல் பயன்பாட்டுக்கான காய்கறிகளின் தற்போதைய சராசரி விலை நிலவரம் (ஒரு கிலோ) பின்வருமாறு: பீன்ஸ்- ரூ.14 முதல் ரூ.22 வரை, தக்காளி- ரூ.8 முதல் ரூ.15 வரை, உருளைக்கிழங்கு- ரூ.10 முதல் ரூ.15 வரை, கேரட்- ரூ.12 முதல் ரூ.30 வரை, பீட்ரூட்- ரூ.30 முதல் ரூ.50 வரை, பீட்ரூட்- ரூ.15 முதல் ரூ.25 வரை, புடலங்காய்- ரூ.13 முதல் ரூ.15 வரை, புடலங்காய்- ரூ.8 முதல் ரூ.10 வரை, வெண்டைக்காய்- ரூ.25 முதல் ரூ.30 வரை, கத்தரிக்காய்- ரூ.15 முதல் ரூ.25 வரை, அவரைக்காய்- ரூ.10 முதல் ரூ.15 வரை, முருங்கைக்காய்- ரூ.30 முதல் ரூ.50 வரை, அவரைக்காய்- ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: ‘கேஸ்’க்கு தனி ரேட்.. ஹோட்டல்களில் உயர்ந்த உணவுகளின் விலை.. ஷாக் கொடுக்கும் சென்னை நிலவரம்!

டீ கடைகள் அதிகம் பாதிப்பு:

ஹோட்டல்களை காட்டிலும் டீ கடைகள் தான் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது டீ கடைகளில் டீ மட்டுமே விற்கப்படுகிறது. எப்போது சிலிண்டர் தட்டுப்பாடு சீரடையுமோ? என தெரியாத நிலையில், வடை, பஜ்ஜி வகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பஜ்ஜிக்காக மிளகாய், வாழைக்காய் ஆகியவற்றை டீ கடைக்காரர்கள் கோயம்பேடு மார்கெட்டுகளில் அதிகளவில் வாங்குவார்கள். தற்போது பஜ்ஜிக்காக வாழைக்காய், மிளகாய் வாங்க ஆட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் அவை தேக்கமடைந்துள்ளன.

Follow Us