நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில்.. ஒருவர் பரிதாப பலி.. பரபரப்பு சம்பவம்!
Visakhapatnam - Duwada Train Met With Fire Accident | விசாகப்பட்டினம் - துவக்காடு வழியாக எர்ணாகுளம் சென்றுக்கொண்டிருந்த டாடா - எர்ணாகுளம் ரயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
எலமஞ்சிலி, டிசம்பர் 29 : விசாகப்பட்டினம் – துவாடா (Visakhapatnam – Duwada) வழியாக எர்ணாகுளம் சென்றுக்கொண்டிருந்த டாடா – எர்ணாகுளம் ரயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 29, 2025 நள்ளிரவு பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக பலியாகியுள்ளார். நள்ளிரவில் நடைபெற்ற இந்த ரயில் விபத்து சம்பவம் குறித்து விரிவாக் பார்க்கலாம்.
நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த எர்ணாகுளம் ரயில் – பரபரப்பு சம்பவம்
18189 என்ற எண் கொண்ட டாடா – எர்ணாகுளம் எக்பிரஸ் ரயில், சரியாக அதிகாலை 1,30 மணிக்கு தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. ரயிலின் பி1 மற்றும் எம்2 ஏசி பெட்டிகளில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலில் தீப்பற்றியதை கவனித்த லோகோ பைலட்டுகள் உடனடியாக எலமஞ்சிலில் அருகே ரயிலை நிறுத்தியுள்ளனர். இந்த விபத்து காரணமாக அந்த இரண்டு பெட்டிகளுமே முழுவதுமாக தீயில் கருகி நாசமாகியுள்ளன.
இதையும் படிங்க : இளம் பெண்ணை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று பாலியல் சீண்டல்.. அராஜகத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள்!
தீயை கட்டுப்படுத்த முயன்ற தீயணைப்பு துறையினர்
இந்த தீ விபத்து தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனகப்பள்ளி, எலமஞ்சிலி மற்றும் நக்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முயற்சி செய்துள்ளனர். ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள்ளாக இரண்டு பெட்டிகள் எரிந்து சேதமாகியுள்ளன. தீ விபத்து குறித்து தெரிந்தவுடன் ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்திற்குள் ஓடிவிட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அரசுப் பள்ளிகளில் தினமும் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்.. அதிரடி உத்தரவு எங்கு தெரியுமா?
உடல் கருகி பலியான முதியவர்
தீ விபத்தின் போது ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்திற்குள் சென்று உயிர் பிழைத்துக்கொண்ட நிலையில், ரயிலில் இருந்த ஒரு பயணி மட்டும் பரிதாபமாக உடல் கருகி பலியாகியுள்ளார். அவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 70 வயதான சந்திரசேகர் சுந்தர் என்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.