அரசுப் பள்ளிகளில் தினமும் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்.. அதிரடி உத்தரவு எங்கு தெரியுமா?
Newspaper Reading Mandatory: கற்றலுக்கும் ஊக்கமாக அமையும் என்பதால், சிறுவர்களுக்கு தினமும் குறைந்தபட்சம் சில நிமிடங்கள் செய்தித்தாள் வாசிப்பதை ஊக்குவிப்பது மிகப் பயனுள்ளதாகும். அதோடு, செய்தித்தாள் வாசிப்பு பழக்கம் ஏற்பட்டால், குழந்தைகளின் போன் ஸ்கிரீன் டைமிங் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காரணம், செய்தித்தாள் வாசிப்பது ஒரு பயனுள்ள ஈடுபாட்டை உருவாக்குகிறது.
உத்தரப் பிரதேசத்தில் தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்திலும் செய்தித்தாள் வாசிப்பை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. செய்தித்தாள் வாசிப்பு என்பது அறிவை விரிவுபடுத்தும் முக்கியமான பழக்கமாகும். தினமும் சில நிமிடங்கள் செய்தித்தாளை படிப்பதன் மூலம் உலகில் நடைபெறும் அரசியல், சமூக, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட பல துறைகளின் தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும். இது மாணவர்களின் பொது அறிவை மேம்படுத்துவதோடு, மொழித் திறன், சொல்வளம், வாசிப்பு திறன் மற்றும் விமர்சன சிந்தனை சக்தியையும் அதிகரிக்கிறது. மாணவர்களை பள்ளியிலேயே இதுபோன்று வாசிப்பு பழக்கத்திற்கு ஊக்கப்படுத்துவது ஆரோக்கியமான விஷயாமாகும். உத்தர பிரதேச அரசின் உத்தரவில் என்னென்ன கூறப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: “செல்போன், அரை கால்சட்டைக்கு தடை”.. இளைஞர்கள், சிறுவர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா?.. எங்கு தெரியுமா?
செய்தித்தாள் வாசிப்பு மிக முக்கியம்:
சிறுவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு மிகவும் முக்கியமானது, ஏனெனில் அது அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பொது அறிவு மேம்படும், மொழித் திறன் உயரும், விமர்சன சிந்தனை வளர்ச்சி பெறும், கவன ஈர்ப்பு மற்றும் ஒருமித்த சிந்தனைக்கு உதவும், சமூக பொறுப்பு உணர்வு ஏற்படுத்தும், கற்றலுக்கும் ஊக்கமாக அமையும் என்பதால், சிறுவர்களுக்கு தினமும் குறைந்தபட்சம் சில நிமிடங்கள் செய்தித்தாள் வாசிப்பதை ஊக்குவிப்பது மிகப் பயனுள்ளதாகும்.




ஸ்கிரீன் டைமிங் குறையும்:
அதோடு, செய்தித்தாள் வாசிப்பு பழக்கம் ஏற்பட்டால், குழந்தைகளின் போன் ஸ்கிரீன் டைமிங் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காரணம், செய்தித்தாள் வாசிப்பது ஒரு பயனுள்ள ஈடுபாட்டை உருவாக்குகிறது. அதனால் அவர்கள் கிடைக்கும் நேரத்தை கைபேசியில் வீணாக ஸ்க்ரோல் செய்யாமல், வாசிப்பில் நேரத்தை செலவிடத் தொடங்குவார்கள். இதன் மூலம் கவன ஈர்ப்பு, ஒருமித்த சிந்தனை, வாசிப்பு ஆர்வம் ஆகியவை அதிகரிப்பதால், இயல்பாக கைபேசி பயன்பாடு கட்டுப்படுத்தப்படும்.
10 நிமிடங்கள் செய்தித்தாள் வாசிப்பு:
அந்தவகையில், உத்தர பிரதேசத்தில் பள்ளிகளில் காலை வகுப்பு தொடங்குவதற்கு முன், மாணவர்களுக்கு 10 நிமிடங்கள் செய்தித்தாள் வாசிப்பிற்காக ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் தேசிய, சர்வதேச மற்றும் விளையாட்டு செய்திகள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மாணவர்கள் மாறிமாறி வாசித்து காட்ட வேண்டும். இதற்காக இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள் தினமும் பள்ளிகளில் வாங்கி வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைப்பு அடிப்படையில் குழு விவாதமும்:
அதோடு, மாணவர்களின் சொல்வளம் மேம்பட, செய்தித்தாள்களில் இருந்து ஐந்து கடினமான சொற்களை தேர்வு செய்து ‘இன்றைய சொல்’ என்ற தலைப்பில் அறிவிப்பு பலகையில் எழுத வேண்டும். மேலும் செய்தித் தலைப்புகளை அடிப்படையாக கொண்டு குழு விவாதமும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 10 பேரை பலி கொண்ட கோர விபத்து…சம்பவ இடத்தில் கேட்ட மரண ஓலம்…பேருந்து ஓட்டுநர் பரபரப்பு தகவல்!
மாணவர்களின் பொது அறிவு, சொல்வளம், விமர்சன சிந்தனை, கவன திறன் மற்றும் சமூக விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநில அரசு அறிவித்துள்ளது.