Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“செல்போன், அரை கால்சட்டைக்கு தடை”.. இளைஞர்கள், சிறுவர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா?.. எங்கு தெரியுமா?

UP Panchayat Guidelines; “பெண்களுக்கு மொபைல் கொடுத்தால் தீய பழக்கங்கள் உருவாகும்; இது சிறுவர்களுக்கும் பொருந்தும். மொபைல்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். திருமணங்கள் கிராமத்திலேயே நடத்தப்பட வேண்டும்; மண்டபங்களில் நடத்துவதால் உறவுகளில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று பஞ்சாயத்து தலைவர் ஓம்பால் சிங் தெரிவித்துள்ளார்.

“செல்போன், அரை கால்சட்டைக்கு தடை”.. இளைஞர்கள், சிறுவர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா?.. எங்கு தெரியுமா?
செல்போன்களுக்கு தடை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Dec 2025 15:43 PM IST

உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள காப்ஸ் பஞ்சாயத்து, இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதிப்பதுடன், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இருவரும் அரை கால்சட்டை அணிவதைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. “மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், பாரம்பரிய மதிப்புகளை காக்க வேண்டும்” என்பதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, திருமண விழாக்கள் குறித்தும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமணங்களில் அழைப்போர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், தேவையற்ற செலவுகள் செய்யக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

பாக்பத் காப்ஸ் பஞ்சாயத்து வெளியிட்ட முக்கிய முடிவுகள்:

18–20 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன் தடை, சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இருவருக்கும் அரை கால் சட்டை அணிய தடை, திருமணங்கள் ஊர் அல்லது வீடுகளில் நடத்த வேண்டும்; திருமண மண்டபங்களில் அல்ல, அழைப்பிதழ் அட்டைகள் இல்லை; இதற்கு பதிலாக வாட்ஸ்அப் மூலம் அழைப்பிதழ் அனுப்ப வேண்டும். இந்த முடிவுகள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும், மற்ற கிராமங்களில் உள்ள காப்ஸ் குழுக்களுக்கும் இதை பரப்பி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து காப்ஸ் தலைவர் பிரஜ்பால் சிங் கூறியதாவது, “சமூகத்தின் முடிவே மிகப் பெரியது. ராஜஸ்தானில் எடுக்கப்பட்ட முடிவு பாராட்டத்தக்கது. நாமும் இதையே பின்பற்றுவோம். 18–20 வயதுடைய சிறுவர்களுக்கு மொபைல் தேவையில்லை. குழந்தைகள் குடும்பத்துடன் நேரம் செலவழித்து நல்ல சமூகப் பழக்கங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

பெண்களுக்கு மொபைல் கூடாது:

மற்றொரு தலைவர் ஓம்பால் சிங் தெரிவித்ததாவது, “பெண்களுக்கு மொபைல் கொடுத்தால் தீய பழக்கங்கள் உருவாகும்; இது சிறுவர்களுக்கும் பொருந்தும். மொபைல்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். திருமணங்கள் கிராமத்திலேயே நடத்தப்பட வேண்டும்; மண்டபங்களில் நடத்துவதால் உறவுகளில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன” என்றார்.

இதுகுறித்து உள்ளூர்வாசி கூறியதாவது, “இது ஒற்றுமையுடன் எடுக்கப்பட்ட முடிவு. சிறார்களுக்கு மொபைல் தேவையில்லை. பள்ளியில் கல்விக்காக பயன்படுத்துவது வேறு விஷயம்; ஆனால் வீட்டில் கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும். இந்த முடிவு சரியான நேரத்தில் எடுத்தது என்றார். இந்த தீர்மானங்கள் விரைவில் உத்தரப் பிரதேசம் முழுவதும் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.