AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரியாணி உணவகங்களில் ரூ.70 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு… ஹதராபாத் பிரியாணி கடை விசாரணையை தொடர்ந்து அம்பலம்!

Biryani Restaurants Tax Evasion: நாடு முழுவதும் உள்ள பிரியாணி உணவகங்களில் வாடிக்கையாளர்களின் பில்களை அழித்து சுமார் ரூ. 70 ஆயிரம் கோடிக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது போலீசாரின் திடீர் சோதனையில் தெரியவந்துள்ளது. இதனால், விசாரணை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது .

பிரியாணி உணவகங்களில் ரூ.70 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு… ஹதராபாத் பிரியாணி கடை விசாரணையை தொடர்ந்து அம்பலம்!
பிரியாணி உணவகங்களில் ரூ.70 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 20 Feb 2026 12:28 PM IST

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள பிரியாணி உணவகங்களில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் உணவகத்தில் வரி ஏய்ப்பு மோசடி செய்தது தெரியவந்தது. இதில், உணவகத்துக்கான வருவாயை மறைப்பதற்காக பில்டிங் மென்பொருளை தவறாக கையாண்டதுடன், சுமார் ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பில்கள் மறைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. உணவகங்களில் பில்களை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு பெரிய கணினி அமைப்பின் மூலம் இந்த தகவல் வெளிவந்தது. இந்த பில்லிங் மென்பொருளை நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதில், கணினி கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலமாக அதிகாரிகள் கிட்டத்தட்ட 1.7 லட்சம் உணவகங்களின் பில் பதிவுகளை சரி பார்த்து, சுமார் 60 டிராபைட் தரவுகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.

ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான உணவகங்களில் பில்கள் நீக்கம்

உணவகங்களில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திய பிறகு, பல பில்கள் நீக்கம் செய்யப்பட்டதுடன், வேறு கணினிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள உணவகங்களில் இந்த மென்பொருளை பயன்படுத்தி ரூ.13 ஆயிரம் கோடிக்கு அதிகமான மதிப்புள்ள பில்களை அழித்துள்ளனர். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் மறைக்கப்பட்ட பில்கள் சுமார் ரூ.5,100 கோடிக்கு மேல் இருந்தது தெரிய வந்தது. இதனை 40 உணவகங்களுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று உண்மையான விற்பனை பில்களை கணினி பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர். கர்நாடகம், தெலுங்கானா மற்றும் தமிழகத்திலும் அதிக வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளது தெரிய வந்தது.

மேலும் படிக்க: இலவசங்கள் வழங்கினால் மக்கள் வேலைக்கு செல்வார்களா? நிதி எங்கே கிடைக்கிறது? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

குறைவான வருவாயை சமர்ப்பித்த உரிமையாளர்கள்

உணவகங்களின் உரிமையாளர்கள் உண்மையான வருவாயை விட குறைவான வருவாய் வந்ததாக வருமான வரித்துறை இடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். தற்போது வரை ஆய்வு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அனைத்து உணவாக விற்பனைகளும் 4- இல் 1 பங்கு மறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுவாக உணவகங்களில் அனைத்து கட்டணங்கள், பணம், அட்டைகள் மற்றும் யுபிஐ ஆகியவற்றை பில்லிங் மென்பொருளில் உள்ளீடு செய்கின்றன. இதனால், ஊழியர்கள் பணத்தை திருட முடியாது. ஆனால், விசாரணையாளர்கள் உரிமையாளர்கள் தாங்களாகவே இந்த அமைப்பை தவறாக பயன்படுத்துவதை கண்டறிந்துள்ளனர்.

நாடு முழுவது விரிவுபடுத்தப்பட்ட விசாரணை

குறிப்பிட்ட நாட்களுக்கு அல்லது ஒரு மாதம் முழுவதும் அனைத்து பில்களையும் அழித்துவிட்டு பின்னர் மிகக் குறைந்த வருமானத்தை காட்டி வருமானத்தை தாக்கல் செய்வதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.2.43 லட்சம் கோடி உணவக விற்பனை நடைபெற்றது தெரியவந்தது. அனைத்தையும் பகுப்பாய்வு செய்வதற்காக செய்வதற்காக, அதிகாரிகள் டிஜிட்டல் ஆய்வகங்களில் இருந்து உணவக பதிவுகளை ஜிஎஸ்டி எண்கள் மற்றும் பொது பட்டியல்கள் போன்ற ஆன்லைன் தகவல்களுடன் தகவல்களுடன் பொருத்திய செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர். முதலில் ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் அதன் அருகில் உள்ள நகரங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், இந்த விசாரணை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

மேலும் படிக்க: பச்சிளம் குழந்தையுடன் பொதுத்தேர்வு எழுத வந்த இளந்தாய்.. நெகிழ்ச்சிச் சம்பவம்!!