AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கட்டாய உடலுறவு.. இளம் பெண்ணை சித்ரவதை செய்து கொன்ற காதலன்.. பகீர் சம்பவம்!

Young Woman Brutally Killed By Her Lover | மத்திய பிரதேத்தின் இந்தூர் பகுதியில் தனியாக பேச வேண்டும் என காதலியை வீட்டிற்கு அழைத்த இளைஞர், அவரை கட்டாய உறவில் ஈடுபடுத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாய உடலுறவு.. இளம் பெண்ணை சித்ரவதை செய்து கொன்ற காதலன்.. பகீர் சம்பவம்!
இளம் பெண்ணை கொலை செய்த நபர்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 17 Feb 2026 17:40 PM IST

இந்தூர், பிப்ரவரி 17 : மத்திய பிரதேச (MP – Madhya Pradesh) மாநிலம், இந்தூரின் (Indoor) துவாரகபுரி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வீட்டை திறந்து பார்த்த நிலையில், படுக்கை அறையில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக உயிரற்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இளம் பெண்ணின் காதலன் சொன்ன பகீர் வாக்குமூலம்

பிரேத பரிசோதனையில் இளம் பெண் கொலை செய்யப்பட்டது தெரிய வந்த நிலையில், அந்த பெண் இறந்து கிடந்த வீட்டை வாடகை எடுத்த பியூஷ் தம்மோடியா என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், இளம் பெண்ணும், பியூஷும் ஒரே கல்லூரியில் எம்பிஏ படித்து வந்துள்ளனர். இவரும் காதலித்து வந்த நிலையில், தனது காதலி வேறு சில ஆண்களுடன் பழகுவதாக பியூஷ் சந்தேகமடைந்துள்ளார். இதன் காரணமாக அவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அதனை பேசி தீர்க்க இளம் பெண்ணை அவர் வீட்டிற்கு அழைத்துள்ளார்.

இதையும் படிங்க : வாடிக்கையாளரின் 2 கிலோ தங்கத்தை திருடி விற்பனை செய்த மேலாளர்.. அதிர்ச்சி சம்பவம்!

கட்டாய உடலுறவு – இளம் பெண்ணை சித்ரவதை செய்த காதலன்

அவரை நம்பி வந்த இளம் பெண்ணிடம் உள்ளாசமாக இருக்கலாம் என்று பியூஷ் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்த அவரை தாக்கி கட்டாய உடலுறவில் ஈடுபட்டுள்ளார். பிறகு அந்த இளம் பெண்ணின் கை, கால்கள் மற்றும் கண்களை கட்டி கடுமையாக தாக்கியுள்ளார். இந்த நிலையில் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என அந்த இளம் பெண் முயற்சி செய்த நிலையில், கழுத்தை நெறித்து, கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க : காதலர் தினத்தில் கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்ற பெண்.. கணவரிடம் கையும், களவுமாக சிக்கியதால் பரபரப்பு!

பின்னர் மும்பைக்கு தப்பிச் சென்ற அவர் இறந்த தனது காதலியுடன் பேசுவதற்கான பூஜைகளை செய்துள்ளார். பிறகு உள்ளூர் ரயில்களில் பயணம் செய்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர். தனது காதலியுடன் உள்ளாசமாக இருப்பதற்காக பியூஷ் மாத்திரை சாப்பிட்ட நிலையில், போதை தலைக்கேறி இத்தைய கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.