AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காதலர் தினத்தில் கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்ற பெண்.. கணவரிடம் கையும், களவுமாக சிக்கியதால் பரபரப்பு!

Woman Roaming With Boyfriend On Valentines Day | நேற்று (பிப்ரவரி 14, 2026) உலக அளவில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், காதலர் தினத்தன்று கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்று பெண் ஒருவர் தனது கணவரிடம் கையும், களவுமாக சிக்கியுள்ளார்.

காதலர் தினத்தில் கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்ற பெண்.. கணவரிடம் கையும், களவுமாக சிக்கியதால் பரபரப்பு!
மேம்பாலத்தின் மீது கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Feb 2026 07:00 AM IST

லக்னோ, பிப்ரவரி 15 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், லக்னோவில் (Lucknow) காதலர் தினத்தன்று கள்ளக்காதலுடன் சென்ற மனைவியை, கணவன் மடக்கி பிடித்து சண்டையிட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், காதலர் தினத்தன்று பெண் தனது கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்ற சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

காதலர் தினத்தில் கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்ற பெண்

உத்தர பிரதேச மாநிலம், ஹம்பூர் மாவட்டம், மீரட் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த இளைஞரின் மனைவிக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 14, 2026) காதலர் தினத்தை முன்னிட்டு அந்த பெண் தனது கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்றுள்ளார்.

இதையும் படிங்க : உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்த 10 மாத குழந்தை.. கேரளாவில் மனதை உலுக்கும் சம்பவம்!

மீரட் மேம்பாலம் அருகே இருவரும் பைக்கில் சென்றதை அந்த இளம் பெண்ணின் கணவர் பார்த்துள்ளார். இதனை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அவர், அவர்களை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று விரட்டி சென்று மடக்கி பிடித்துள்ளார். அப்போது அந்த இளைஞருக்கும் அவரின் மனைவியின் கள்ளக்காதலனுக்கும் இடையே மிக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கைகலப்பாக மாறிய வாக்குவாதம் – வைரலாகும் வீடியோ

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அது கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார் மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர். பின்னர் மூன்று பேரையும் அவர்கள் கண்டித்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us