வினாத்தாள் கசிவு விவகாரம் – முறைக்கேடுகளை தவிர்க்க சிறப்பு குழுவை அறிவித்த பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் போட்டித் தேர்வு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உயர்மட்ட குழுவை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்தக் குழுவுக்கு ஆதார் திட்டத்தின் வடிவமைப்பாளரும், தொழில்நுட்ப வல்லுநருமான நந்தன் நிலேகனி தலைமை வகிக்கிறார். போட்டித் தேர்வுகளை மேலும் வெளிப்படையாகவும், தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பாகவும் மாற்றுவது இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் போட்டித் தேர்வு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உயர்மட்ட குழுவை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்தக் குழுவுக்கு ஆதார் திட்டத்தின் வடிவமைப்பாளரும், தொழில்நுட்ப வல்லுநருமான நந்தன் நிலேகனி தலைமை வகிக்கிறார். போட்டித் தேர்வுகளை மேலும் வெளிப்படையாகவும், தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பாகவும் மாற்றுவது இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.
சிறப்பு குழுவை அறிவித்த பிரதமர் மோடி
நாட்டின் தேர்வு முறையில் விரிவான மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக மத்திய அரசு ஒரு உயர்மட்டப் பணிக்குழுவை அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இக்குழுவிற்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தொழில்நுட்ப நிபுணருமான நந்தன் நிலேகனி தலைமை தாங்குவார். தேர்வு முறையை மேலும் நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் மாற்றும் நோக்கத்துடன் இந்தக் புதிய குழு அமைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
பிரதமர் மோடி பேசிய வீடியோ
View this post on Instagram
மேலும் பேசிய அவர், பல்வேறு தேசிய அளவிலான தேர்வுகளில் சமீபகாலமாக நடைபெற்ற வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் குறித்த மாணவர்களின் கவலைகளுக்கு மத்தியில் மத்திய அரசின் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதும், தொழில்நுட்பத்தின் பயனுள்ள பயன்பாட்டை அதிகரிப்பதும் இப்பணிக்குழுவின் முக்கிய நோக்கம் என்று பிரதமர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களின் எதிர்காலத்தையும் நாட்டின் கல்வி முறையையும் வலுப்படுத்த சீர்திருத்தங்கள் அவசியம். தேர்வுகள் மாணவர்களின் திறனை நியாயமாக மதிப்பிடும் ஒரு அமைப்பாகத் தொடர்ந்து இருக்க வேண்டும், இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தற்போதைய தேர்வு முறையின் செயல்பாட்டை விரிவாக மதிப்பீடு செய்யவுள்ள இப்பணிக்குழு, தொழில்நுட்பப் பாதுகாப்பு, தேர்வு நிர்வாகம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்களுக்குச் சமமான வாய்ப்புகளை உறுதி செய்தல் போன்ற விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும். தேர்வு நிர்வாகத்தில் பிழைகளைக் குறைப்பதிலும், எதிர்காலத்தில் இத்தகைய முறைகேடுகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதிலும் இக்குழு கவனம் செலுத்தும்.
இதற்கிடையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரங்களில் தொடர்புடையவர்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தேர்வுச் சீர்திருத்தங்களுக்காக நந்தன் நிலேகனி தலைமையில் புதிய உயர்மட்டப் பணிக்குழு அமைக்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பு, கல்வித் துறையின் மீதான நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.