AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பச்சிளம் குழந்தையுடன் பொதுத்தேர்வு எழுத வந்த இளந்தாய்.. நெகிழ்ச்சிச் சம்பவம்!!

Maharashtra student: கைக்குழந்தையுடன் வந்த மாணவியின் நிலைமையைப் புரிந்துகொண்ட தேர்வு மைய அதிகாரிகள், அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்தனர். தேர்வு நடக்கும்போது குழந்தையைப் பராமரிக்கத் தேவையான உதவிகள் செய்யப்பட்டன. பச்சிளம் குழந்தை உறங்குவதற்காகத் தேர்வு மையத்திலேயே தொட்டில் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

பச்சிளம் குழந்தையுடன் பொதுத்தேர்வு எழுத வந்த இளந்தாய்.. நெகிழ்ச்சிச் சம்பவம்!!
பொதுத்தேர்வு எழுத வந்த இளந்தாய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 20 Feb 2026 08:53 AM IST

மகாராஷ்டிரா, பிப் 20: மும்பையில் பெண் ஒருவர் குழந்தை பிறந்த 2 நாட்களில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை, தேர்வு அறைக்கு வந்து எழுதி அனைவரையும் நெகிழச்செய்துள்ளார். “ஒரு ஆண் கற்றால் அது அவரோடு முடியும், ஆனால் ஒரு பெண் கற்றால் அது அந்தத் தலைமுறைக்கே போய்ச் சேரும்” என்ற பொன்மொழிக்கு இலக்கணமாகத் திகழ்கிறார் அந்த 21 வயது இளம் தாய். யாரையும் பொருட்படுத்தாது தனது கைக்குழந்தையுடன் தேர்வு அறைக்கு வந்த அப்பெண், பொதுத்தேர்வை எழுதி, பலருக்கும் உத்வேகமளித்துள்ளார்.

இதையும் படிங்க: போட்டோஷூட்டில் பிஸியான கர்ப்பிணி தாய்.. தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலியான 3 வயது குழந்தை..

கல்வியின் மீது கொண்ட தீராத தாகம்:

மகாராஷ்டிர மாநிலம் நாந்தெட் பகுதியைச் சேர்ந்த சித்தல் (21), வறுமை காரணமாகத் தனது படிப்பைப் பாதியில் நிறுத்தியிருந்தார். இருப்பினும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து மீண்டும் படிக்கத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையிலும், கல்வியைத் தொடர வேண்டும் என்ற தனது வைராக்கியத்தை அவர் கைவிடவில்லை. தற்போது ஸ்ரீபர்சேவார் ஜூனியர் கல்லூரியில் 12-ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

தடைகளைத் தகர்த்த துணிச்சல்:

சமீபத்தில் இவருக்குக் குழந்தை பிறந்தது. பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் பிரசவம் நடந்ததால், இந்த ஆண்டு தேர்வை எழுத முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், “அடுத்த ஆண்டு பார்த்துக்கொள்ளலாம்” என்று தள்ளிப்போட விரும்பாத சித்தல், துணிச்சலான முடிவை எடுத்தார். குழந்தை பிறந்த பத்தே நாட்களில், குறிப்பாக பிரசவத்திற்குப் பிந்தைய இரண்டாவது நாளிலேயே (கடந்த 10-ம் தேதி) நடைபெற்ற ஆங்கிலத் தேர்வை எழுதத் தனது சகோதரியுடன் தேர்வு மையத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை அன்று அரசியல் அறிவியல் தேர்வையும் வெற்றிகரமாக எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: வாடிக்கையாளரின் 2 கிலோ தங்கத்தை திருடி விற்பனை செய்த மேலாளர்.. அதிர்ச்சி சம்பவம்!

தேர்வு மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்:

கைக்குழந்தையுடன் வந்த மாணவியின் நிலைமையைப் புரிந்துகொண்ட தேர்வு மைய அதிகாரிகள், அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்தனர். தேர்வு நடக்கும்போது குழந்தையைப் பராமரிக்கத் தேவையான உதவிகள் செய்யப்பட்டன. பச்சிளம் குழந்தை உறங்குவதற்காகத் தேர்வு மையத்திலேயே தொட்டில் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. கல்வியை உயிர்மூச்சாகக் கருதி, உடல்நலச் சவால்களையும் மீறி பொதுத்தேர்வு எழுதிய சித்தலின் இந்த முயற்சி, மகாராஷ்டிரா முழுவதும் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.