Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருச்சியில் கொடூர சம்பவம்…ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை!

4 Members Of The Same Family Commit Suicide: திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக ஸ்ரீ ரங்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் கொடூர சம்பவம்…ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 19 Dec 2025 16:27 PM IST

திருச்சி மாவட்டம், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் மற்றும் பக்தர்கள் திருச்சிக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஸ்ரீ ரங்கத்தில் உள்ள யாத்திரி நிவாஸில் தங்கி இருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் (67), இவரது மனைவி செண்பகவல்லி மற்றும் இவர்களின் இரு மகள்கள் ஆகியோருடன் கடந்த டிசம்பர் 10- ஆம் தேதி ஸ்ரீ ரங்கத்துக்கு வந்தனர். இவர்கள், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் சென்று தரிசனம் மேற்கொள்வதற்காக ஸ்ரீரங்கத்தில் உள்ள யாத்திரி நிவாஸில் ரூம் எடுத்து தங்கி இருந்தனர்.

இரு நாள்களாக திறக்காத யாத்ரி நிவாஸின் அறை கதவு

இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக அவர்கள் தங்கி இருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த யாத்திரி நிவாஸின் ஊழியர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால், யாரும் கதவை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அறையில் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு தடை… மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகாரட்சி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

இதனால், மேலும் சந்தேகம் அடைந்த யாத்திரி நிவாஸ் ஊழியர்கள் ஸ்ரீ ரங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, அந்த அறையில் தாய், தந்தை, இரு மகள்கள் ஆகிய நான்கு பேரும் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

அழுகிய நிலையில் 4 பேரின் சடலங்கள்

அவர்களின் உடைமைகளை சோதனை செய்ததில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களுடைய சுயவிவரமும் தெரியவந்தது. மேலும், அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால், கடும் தூர்நாற்றம் வீசியது. பின்னர், நான்கு பேரின் சடலங்களை மீட்டு உடல் கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை

இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீ ரங்கம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் சாப்பாட்டில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: சாத்தான்குளத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை…4 தனிப்படைகள் அமைப்பு…போலீசார் விசாரணை!!