சாலையில் நடந்து சென்ற தம்பதி.. கணவனை அடித்துவிட்டு மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கும்பல்.. பகீர் சம்பவம்!
Husband and Wife Assaulted By A Group Of Men | ராமேஸ்வரத்தில் கணவன் - மனைவி இருவர் சாலையில் நடந்துச் சென்ற நிலையில், அங்கிருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கணவனை அடித்துவிட்டு அவரது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம், டிசம்பர் 19 : ராமநாதபுரம் (Ramanathapuram) மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள மல்லிகா நகர் பகுதியை சேர்ந்த தம்பதி இருவர், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு சாலையில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த சாலை ஓரத்தில் 4 இளைஞர்கள் நின்றுக்கொண்டு இருந்துள்ளனர். மதுபோதையில் இருந்த அவர்கள் நான்கு பேரும், தம்பதியினரை பின்தொடர ஆரம்பித்துள்ளனர். அப்போது அவர்கள் கடும் அதிர்ச்சியூட்டும் செயலை செய்துள்ளனர்.
கணவரை தாக்கிவிட்டு மணைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்
கணவன், மனைவியை பின்தொடர்ந்து சென்ற அந்த நான்கு பேரும் திடீரென அந்த பெண்ணின் கணவரை தாக்கிவிட்டு, அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த நிலையில், கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த பெண் அந்த நான்கு பேரிடம் இருந்து தப்பி ஓடி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிக்கு சென்று உதவி கேட்டுள்ளார். அதனை கண்ட அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர். அந்த நான்கு பேரில் மூன்று பேர் தப்பிவிட்ட நிலையில், ஒருவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படிங்க : ரூ.1000 மதிப்பிலான பட்டுப்புடவை வெறும் ரூ.299 மட்டுமே…. பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி இணையதளம்… நூதன மோசடி
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நெஞ்சுவலி – மருத்துவமனையில் சிகிச்சை
பின்னர் அந்த இளைஞர்கள் தாக்கியதில் காயமடைந்த தனது கணவரை அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் மீட்ட அந்த பெண் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே தனக்கு நடந்த கொடூர சம்பவம் காரணமாக அந்த பெண்ணுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Year Ender 2025 : ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ்… ஏஐ மூலம் சுங்க கட்டணம் வசூல் – இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பான திட்டங்கள்
தலைமறைவாக உள்ளவர்களை வலைவீசி தேடும் போலீஸ்
இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மூன்று பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.