Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.1000 மதிப்பிலான பட்டுப்புடவை வெறும் ரூ.299 மட்டுமே…. பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி இணையதளம்… நூதன மோசடி

Fake Website Scam: வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர், பிரபல பட்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, போலி இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். அந்த போலி இணையதளத்தில், ரூ.1000 மதிப்புள்ள பட்டுப் புடவைகள் ரூ.299க்கு மட்டுமே வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதிகளுடன் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர். 

ரூ.1000 மதிப்பிலான பட்டுப்புடவை வெறும் ரூ.299 மட்டுமே…. பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி இணையதளம்… நூதன மோசடி
பிரபல நிறுவனத்தின் பெயரில் ஆன்லைன் மோசடி
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Dec 2025 20:00 PM IST

திருவண்ணாமலை, டிசம்பர் 18: திருவண்ணாமலையில் (Tiruvannamalai), பிரபல பட்டுப் புடவை (Silk Saree) நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஒரு மோசடி சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.1000 மதிப்புள்ள பட்டுப் புடவைகளை வெறும் ரூ.299க்கு வழங்கப்படும் என விளம்பரப்படுத்தி, மக்களை ஏமாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல  பட்டுப்புடவை நிறுவனத்தின் பெயரில் போலியான இணையதளம் உருவாக்கி அதன் மூலம் வடமாநிலத்தை சேர்ந்த சிலர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி என்ற ஊர், பட்டுப்புடவைகள் தொழிலுக்கு உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிலையில், ஆரணி அருகே உள்ள ஒன்னுபுரம் கிராமத்தை சேர்ந்த மைதிலி சண்முகராஜன் என்பவர், கடந்த 8 ஆண்டுகளாக டிஎஸ்ஆர் சில்க் சாரி சென்டர்  என்ற பெயரில் பட்டுப் புடவை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களது நிறுவனம் நேரடி விற்பனையுடன், ஆன்லைன் மூலமாகவும் புடவைகள் விற்பனை செய்து வருகிறது.

இதையும் படிக்க : பால் கலப்படத்தை தடுக்க புதிய கொள்கை…தமிழக அரசு அதிரடி!

இந்த நிலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத சிலர், இந்த நிறுவனத்தின் பெயர், லோகோ மற்றும் விவரங்களை தவறாக பயன்படுத்தி, போலி இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். அந்த போலி இணையதளத்தில், ரூ.1000 மதிப்புள்ள பட்டுப் புடவைகள் ரூ.299க்கு மட்டுமே வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதிகளுடன் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும், வங்கி முகவரியை குறிப்பிட்டு இதில் பணம் செலுத்தி, பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டால், புடவைகள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நம்பி பலர் விளம்பரத்தில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் பணம் செலுத்தி நீண்ட நாட்களாகியும் புடவை கிடைக்காததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, டிஎஸ்ஆர் சில்க்ஸ் சேரிஸ் சென்டர் நிறுவனத்தை தொடர்புகொண்டு தங்கள் புகாரை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : பள்ளி மாணவன் கண்டெடுத்த அதிசய நாணயம்..1000 ஆண்டுகள் பழமை..ராமநாதபுரத்தில் ஆச்சரியம்!

இதனால் டிஎஸ்ஆர் நிர்வாகம் விசாரணை மேற்கொண்ட போது தங்களது நிறுவனத்தின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டு, பொதுமக்களை ஏமாற்றி ஒரு கும்பல் பணம் வசூலித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நிறுவனம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சைபர் கிரைம் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட போலி இணையதளத்தை ஆய்வு செய்து இணையதளத்தை உருவாக்கியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக எந்தவொரு சந்தேகத்திற்குரிய இணையதளங்களையோ அல்லது சமூக வலைதள விளம்பரங்களையோ நம்ப வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இணையதளங்கள் மூலம் பொருட்கள் வாங்கும் முன், அது அதிகாரப்பூர்வ இணையதளமான என ஒருமுறை சரிபார்த்துக்கொள்வது அவசியம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.