NRI சிறுவனை அதிர்ச்சியில் ஆழ்த்திய சென்னை உணவக பில்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
Viral Video: NRI சிறுவன் சென்னையில் இருக்கக்கூடிய ஒரு பிரபல உணவகத்திற்கு சென்று ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கான பில் 1,500 ரூபாயாக மட்டுமே இருந்தது. இதனை கண்டு ஆச்சரியமடைந்த அந்த சிறுவன், இத்தனை உணவுப் பொருட்களை உட்கொண்ட போதிலும் வெறும் 1,500 ரூபாய் மட்டுமே பில் வந்துள்ளது என தெரிவித்தார்.
சென்னை, டிசம்பர் 17, 2025: நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு இளம் வெளிநாட்டு வாழ் இந்திய சிறுவனுக்கு, சென்னையில் இருக்கக்கூடிய ஒரு பிரபல உணவகத்தின் பில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில், அந்த சிறுவன் பில்லை வியப்புடனும் ஆச்சரியத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், இவ்வளவு உணவுகளை ஆர்டர் செய்த போதிலும் 1,500 ரூபாய் மட்டுமே பில் வந்துள்ளதாகவும், தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். பொதுவாக வெளிநாடுகளில் உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலை அதிகமாக இருக்கும்.
அதே சமயத்தில், இந்தியாவில் அமெரிக்க டாலர்களை ஒப்பிடும்போது விலை குறைவாக காணப்படுகிறது. இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பலரும் இங்கிருந்து அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது.
குறிப்பாக வீட்டு உபயோகப் பொருட்களான மிக்ஸி, கிரைண்டர், பாத்திரங்கள், மசாலா பொருட்கள், ஆடைகள் உள்ளிட்டவற்றை அவர்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இங்கே வாங்கும் போது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இவை விலை மலிவாக கிடைக்கின்றன. அந்த வரிசையில், தற்போது நியூசிலாந்தைச் சேர்ந்த இந்த சிறுவன் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இணையத்தில் கவனம் பெற்ற சிறுவன்:
View this post on Instagram
அதாவது, இந்த சிறுவன் சென்னையில் இருக்கக்கூடிய ஒரு பிரபல உணவகத்திற்கு சென்று ஏழு உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கான பில் 1,500 ரூபாயாக மட்டுமே இருந்தது. இதனை கண்டு ஆச்சரியமடைந்த அந்த சிறுவன், இத்தனை உணவுப் பொருட்களை உட்கொண்ட போதிலும் வெறும் 1,500 ரூபாய் மட்டுமே பில் வந்துள்ளது என்றும், இதே உணவுகளை நியூசிலாந்தில் சாப்பிட்டிருந்தால் கிட்டத்தட்ட 400 முதல் 500 டாலர் வரை செலவாகியிருக்கும் என்றும் குறிப்பிட்டார் என தெரிவித்தார்.
மேலும் படிக்க: ரேஷன் கடைகளில் சானிடரி நாப்கின்.. ரூ.4000 கோடி செலவு.. பட்ஜெட்டை காரணம் காட்டி மறுத்த தமிழக அரசு!!
இது தொடர்பான வீடியோவை அவரது தாயார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அந்த சிறுவன் பில்லில் இடம்பெற்றுள்ள உணவுப் பொருட்களை ஒவ்வொன்றாக சத்தமாக வாசிக்கிறார். பேபி கார்ன் மஞ்சூரியன், போண்டா, தாஹிப் பாப்படி, ஸ்பெஷல் ஃபலூடா, பன்னீர் மசாலா தோசை, நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தனை உணவுகளுக்கும் வெறும் 30 டாலர் மட்டுமே செலவாகியுள்ளது என்றும், இதே உணவுகளை நியூசிலாந்தில் இரண்டோ மூன்றோ உணவுப் பொருட்களாக ஆர்டர் செய்திருந்தாலே 300 டாலர் வரை பில் வந்திருக்கும் என்றும் தனது தாயிடம் கூறுகிறார். அதற்கு அவரது தாயார், “என்ன செய்வது கண்ணா, இது இந்தியா” என கிண்டலாக பதில் அளித்தார் என தெரிவித்தார்.
பயணர்கள் சொல்வது என்ன?
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், இந்திய மக்களின் சம்பளச் சீட்டையும் அந்த சிறுவன் பார்த்து இதே போன்ற ஒரு வீடியோவை பதிவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், நியூசிலாந்து எப்போதும் ஒரு ஆடம்பரமான நாடாக இருந்தாலும், மூன்று உணவுப் பொருட்களுக்கு 300 டாலர் என்பது சற்று அதிகமாகத்தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் ஒருவர், 1,500 ரூபாய் என்பது எங்களுக்கே மிகவும் அதிகமான தொகைதான் என குறிப்பிட்டுள்ளார். இதே போல் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.