Viral Video : பால்கனியில் ஆபத்தான முறையில் விளையாடிய சிறுவன்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ!
Child Playing Dangerously In Balcony | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சிறுவன் ஒருவர் ஆபத்தான முறையில் பால்கனியில் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. காண்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கும் வகையில் இந்த வீடியோ உள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் நம்மை சுற்றி நடைபெறும் சம்பங்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்கள் சில அதிர்ச்சியூட்டும் விதமாகவும், சில ஆச்சர்யமூட்டும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், சிறுவன் ஒருவர் ஆபத்தான முறையின் வீட்டின் பால்கனியில் விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
பால்கனியில் ஆபத்தான முறையில் விளையாடிய சிறுவன்
சிறுவர்களுக்கு எப்போதுமே விளையாடிக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும். முன்பெல்லாம் ஒரு வீதியில் உள்ள சிறுவர்கள் ஒன்றாக இணைந்து விளையாடி மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால், தற்போது அப்படியெல்லாம் இல்லை. தாய், தந்தை என இருவருமே பணிக்கு சென்றுவிடுவதால் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கூட கவனிக்க யாரும் இருப்பதில்லை. இந்த நிலையில், பிள்ளைகள் ஆபத்தான செயல்களை செய்யும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், சிறுவன் ஒருவர் ஆபத்தான முறையில் பால்கனியில் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : வழி தெரியாமல் தவித்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி.. உதவிய இந்திய பெண்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சிறுவன் ஒருவர் வீட்டின் பால்கனியில் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார். அது ஒரு 6 அல்லது 7வது மாடி இருக்கும் போல தோன்றுகிறது. அந்த சிறுவன் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் மிகவும் ஆபத்தான முறையில் விளையாடிக்கொண்டு இருக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.