AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹார்முஸ் கடல்வழி பிரச்னை – இந்தியாவுக்கு நல்ல செய்தி – புதிய எண்ணெய் பாதையை திறந்த சவுதி அரேபியா

Saudi Oil Supply: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் கடல் வழி மூடப்பட்டுள்ளதால் இந்தியா முழுதும் நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நிலையில், சவுதி அரேபியா இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க புதிய மாற்று பாதையை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

ஹார்முஸ் கடல்வழி பிரச்னை – இந்தியாவுக்கு நல்ல செய்தி – புதிய எண்ணெய் பாதையை திறந்த சவுதி அரேபியா
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Mar 2026 22:01 PM IST

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் கடல் வழி மூடப்பட்டுள்ளதால் இந்தியா முழுதும் நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளளது. இந்த நிலையில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு முக்கியமான நம்பிக்கை உருவாகியுள்ளது. இந்த நிலையில், சவுதி அரேபியா இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க புதிய மாற்று பாதையை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சவுதி அரேபியாவின் ரெட் எனப்படும் கடற்கரை பகுதியில் உள்ள யன்பு துறைமுகத்திலிருந்து பல பெரிய எண்ணெய் டேங்கர்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. கப்பல் கண்காணிப்பு நிறுவனங்களின் தகவலின் படி, தற்போது 4 பெரிய கச்சா எண்ணெய் கப்பல்கள் சுமார் 6 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உடன் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. மேலும், இந்த மாத இறுதிக்குள் 9 முதல் 10 மில்லியன் பேரல்கள் வரை இந்தியாவுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல்.. விமான சேவைகள் முடக்கம்..

ஹார்முஸ் கடல் வழியில் அதிகரிக்கும் அபாயம்

பெர்சியன் வளைகுடாவை உலகுடன் இணைக்கும் முக்கியமான ஹார்முஸ் கடல் பாதை வழியாக உலகளவில் சுமார் 20 சதவிகித எண்ணெய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகள், குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் இறக்குமதிக்காக இந்த பாதையை பெரிதும் நம்பியுள்ளன. ஆனால், ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சம் காரணமாக இந்த வழியாக கப்பல்கள் செல்வது சிக்கலாகியுள்ளது. இதனால் பல கப்பல்கள் இந்த பாதையை தவிர்க்க தொடங்கியுள்ளன.

இந்த நெருக்கடியை சமாளிக்க சவுதி அரேபியா தற்போது ரெட் கடல் வழியாக எண்ணெய் கப்பல்களை அனுப்ப தொடங்கியுள்ளது. யன்பு துறைமுகத்திலிருந்து 1200 கிலோமீட்டர் நீளமான குழாய் வழியாக எண்ணெய் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கப்பல்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறது. இந்த புதிய பாதை, ஹார்முஸ் கடல் பாதையை தவிர்த்து எண்ணெய் கொண்டுவர பெரிதும் உதவுகிறது. இருப்பினும், இந்த குழாயின் கொள்ளளவு குறைவாக இருப்பதால், முழு அளவிலான விநியோகத்தை இந்த பாதை மூலம் மேற்கொள்ள முடியாது என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : ’உயிரோடு இருக்கிறேன்.. 10 விரல்தான் இருக்கு’ – வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்

ஆனால் இந்த கடல் வழி முழுமையான பாதுகாப்பாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. இந்த பாதை, ஓமனில் உள்ள ஈரானின் ஆதரவாளர்கள் தாக்கும் பகுதிக்குள் வருகிறது. ஏற்னவே இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மோதலின் போது இந்த ஹூதி குழுக்குள் ரெட் சீ வழியாக சென்ற கப்பல்களை தாக்கிய சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதனால் பல கப்பல்கள் ஆப்ரிக்காவின் தெற்கு முழை வழியாக நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து செலவும் அதிகரித்தது.

Follow Us