AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் எந்த நாட்டின் உதவியும் தேவையில்லை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு!

America President Donald Trump On Strait Of Hormuz | ஹோர்முஸ் நீரிணையை கடக்க அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு ஈரான் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. இந்த நிலையில், ஹோர்முஸ் விவகாரத்தில் எந்த நாட்டின் உதவியும் தேவையில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் எந்த நாட்டின் உதவியும் தேவையில்லை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Mar 2026 22:53 PM IST

வாஷிங்டன், மார்ச் 16 : ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கடக்க அமெரிக்கா (America), இஸ்ரேல் (Israel) மற்றும் அவற்றின் நட்பு நாடுகளுக்கு ஈரான் (Iran) தொடர் அனுமதி மறுப்பு செய்து வருகிறது. அவ்வாறு தடையை மீறி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதலும் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் எந்த நாடுகளின் உதவியும் அமெரிக்காவுக்கு தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளா ஈரான்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அந்த வழியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் தங்களின் எதிரி நாட்டு கப்பல்கள் செல்லாத வண்ணம் ஈரான் மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே உலக நாடுகள் தங்களது போர் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்தார். ஆனால், நட்பு நாடுகள் எவையும் அதற்கு செவி சாய்க்கவில்லை.

இதையும் படிங்க : எதிரி நாட்டு கப்பல்களுக்கு அனுமதி இல்லை.. திட்டவட்டமாக கூறும் ஈரான்!

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் எந்த நாட்டின் உதவியும் தேவையில்லை – டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணைக்கு போர் கப்பல்களை அனுப்ப எந்த நாடும் முன்வராத நிலையில், விரக்தியில் இருந்த டிரம்ப், ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் எந்த நாட்டின் உதவியும் அமெரிக்காவுக்கு தேவையில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் எங்களுக்கு உதவ யாரும் தேவையில்லை. நாங்கள் உலகின் வலிமையான தேசம். உலகில் உள்ள ராணுவத்திலேயே மிகவும் வலிமையான ராணுவத்தை கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

இதையும் பாடிங்க : நேபாளத்தில் நடைபெற்ற கோர விபத்து – தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பலி – பலர் படுகாயம்

கூட்டு பாதுகாப்பு என்ற கருத்து இருந்தபோதிலும் நேட்டோ அமைப்பின் உறுப்பினர்கள் உதவவில்லை. நான் அவர்களிடம் உதவிக்காக மிகவும் வற்புறுத்தி பேசுவதில்லை. ஏனெனின் எனது மனநிலை இதுதான். நனக்கு யாருடைய உதவியும் தேவை இல்லை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us