AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rajapalayam Constituency Election 2026: ராஜபாளையம் தொகுதியில் நிலவும் முக்கிய பிரச்சனைகள்.. களம் யாருக்கு சாதகமாக உள்ளது?

2026 சட்டமன்றத் தேர்தலில் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது ராஜபாளையம் ஆகும். ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த தொகுதி தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது ஒரு பொதுத் தொகுதியாகும். இந்த தொகுதியில் ராஜபாளையம் நகரம், சத்திரப்பட்டி, அய்யனார் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடங்குகின்றன.

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Mar 2026 22:06 PM IST
2026 சட்டமன்றத் தேர்தலில் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது ராஜபாளையம் ஆகும். ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த தொகுதி தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது ஒரு பொதுத் தொகுதியாகும். இந்த தொகுதியில் ராஜபாளையம் நகரம், சத்திரப்பட்டி, அய்யனார் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடங்குகின்றன.

2026 சட்டமன்றத் தேர்தலில் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது ராஜபாளையம் ஆகும். ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த தொகுதி தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது ஒரு பொதுத் தொகுதியாகும். இந்த தொகுதியில் ராஜபாளையம் நகரம், சத்திரப்பட்டி, அய்யனார் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடங்குகின்றன.

1 / 6
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் எஸ். தங்கபாண்டியன் சுமார் 74,158 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் கே.டி. ராஜேந்திர பாலாஜி 70,260 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் நான்காவது இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

2 / 6
ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியின் அரசியல் வரலாற்றைப் பார்த்தால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1977ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகம் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் சமமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதே சமயம் புதிதாக அரசியல் களத்தில் களம் காணும் தமிழக வெற்றி கழகம் கட்சியும் இந்த போட்டியில் இணைந்துள்ளது.

3 / 6
ராஜபாளையம் தொகுதி தென் தமிழகத்தின் அரசியல் ரீதியாக முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கோடைக்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்படுவது மக்களின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. பல பகுதிகளில் நீர் விநியோகம் முறையாக இல்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

4 / 6
அதேபோல் விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பதால் பாசன நீர் பற்றாக்குறை விவசாயிகளை பாதிக்கிறது. சாலை மற்றும் போக்குவரத்து வசதி, நகராட்சி அடிப்படை வசதிகள், மழைக்கால வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் மக்கள் தரப்பில் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.  இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு யார் வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.

5 / 6
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திக் என்ற வேட்பாளர் போட்டியிட உள்ளார். அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மீண்டும் எஸ். தங்கபாண்டியன் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளுக்கு யார் நிரந்தர தீர்வு வழங்குவார்கள் என்பதையே பொருத்து வெற்றி வாய்ப்பு இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

6 / 6
Follow Us