பால் கலப்படத்தை தடுக்க புதிய கொள்கை…தமிழக அரசு அதிரடி!
New Policy To Prevent Milk Adulteration: தமிழகத்தில் பாலில் செய்யப்படும் கலப் படத்தை தடுப்பதற்காக புதிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு பால் வளத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கொள்கையில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுவன மயமாக்குவதற்கு பால் வள மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக பால் உற்பத்தி துறையை நெறிப்படுத்தவும், கலப்படத்தை தடுக்கவும், பால் உற்பத்திக்கான பிரத்தியேக கொள்கையை உருவாக்கும் பணியில் அந்த துறை ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் பால் பண்ணையாளர்கள் இடைத்தரகர்களை சார்ந்து இருப்பதற்கு பதிலாக, பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறிய தனியார் நிறுவனங்கள் நேரடியாக பாலை விற்பனை செய்ய முடியும். மேலும், கிராம அளவில் நேரடியாக சிலரை நுகர்வோருக்கு பால் விற்பனை செய்யும் நடைமுறை மாறாமல் இருக்கும். இது தொடர்பாக அண்மையில், பால் வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் தலைமையகத்தில் தனியார் பால் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.
தமிழகத்தில் 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி
அதில், தேசிய பால் வள மேம்பாட்டு வாரியத்தின் தரவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒரு நாளில் சுமார் 3, 000 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஆவின் சந்தை பங்கில் சுமார் 12 சதவீதம் ஆகும். தினமும் 34 லட்சம் முதல் 36 லட்சம் லிட்டர் வரை கொள்முதல் செய்கிறது. அதே நேரத்தில் தனியார் துறை சுமார் 25 சதவீதம் அல்லது ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 75 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது. பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் கிட்டத்தட்ட 60 சதவீதம் ஒழுங்கமைக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை பண்ணையாளர்களால் வாங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “உங்களுக்கு காசுதான் துணை, எனக்கு மக்களின் இந்த மாஸ் தான் துணை” ஈரோட்டில் விஜய் பேச்சு!!




பால் விற்பனையை 50% உயர்த்த முடிவு
இது தொடர்பாக பால் உற்பத்தி மற்றும் பால் வள மேம்பாட்டு இயக்குனரும், ஆவின் நிர்வாக இயக்குனருமான ஜான் லூயிஸ் கூறுகையில், பால் விற்பனையை 50 சதவீதமாக உயர்த்துவதற்கு பால் கொள்கை நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், அதிக அளவில் பால் விற்பனை செய்ய முடியும். தற்போது, இடைத் தரகர்கள் மூலம் விற்கப்படும் பாலில் நோய்க் கிருமிகள், கலப்படம் மற்றும் பிற பிரச்சனைகளை சரி பார்க்க எந்த வழி முறையும் இல்லை.
பால் தர பரிசோதனை உள் கட்டமைப்பு
எனவே, கூட்டுறவு சங்கங்கள் மூலம் பாலை வாங்குவது, சிறிய பால் நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதிப்பது பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு பயன் அளிக்கும். இதில், தனியார் பால் நிறுவனங்கள் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட பாலின் தர பரிசோதனையை மேற்கொள்வதற்கான உள் கட்டமைப்பை வைத்துள்ளதாக கூறினார். பால் விற்பனை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழி நடத்தப்பட்டவுடன், இந்தச் சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களும் பால் வள மேம்பாடு துறையின் கீழ் வரும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: “தமிழகத்தை ஆளப்போவது விஜய்”.. செங்கோட்டையன் ஈரோட்டில் பேச்சு!