இனி மாற்றுத்திறனாளிகளும் கார் ஓட்டலாம்…வந்தாச்சு புதிய கண்டுபிடிப்பு!
New Invention For Disabled People: மாற்றுத்திறனாளிகள் கார் ஓட்டுவதற்காக புதிய அமைப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிகள் தாராளமாக காரை இயக்கலாம். இந்த அமைப்பானது தானியங்கி கார்களில் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
சென்னையை சேர்ந்தவர் முருகவேல். கார் ஓட்டுனரான இவர், அண்மையில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அவரது வலது கால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 20 ஆண்டு கால ஓட்டுநர் வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்து விட்டதாக முருகவேல் எண்ணினார். எனவே, மீண்டும் ஓட்டுநர் தொழிலுக்கு செல்ல முடியாத நிலைக்கு முருகவேல் தள்ளப்பட்டிருந்தார். இந்த நிகழ்வு குறித்து அறிந்த அசோக் நகரைச் சேர்ந்த கார் மெக்கானிக்கான செந்தில் புதிய அமைப்பு ஒன்றை கண்டுபிடித்தார். இவர், மாற்றுதிறனாளிகளுக்கான உதவி ஓட்டுநர் சாதனங்களை வடிவமைத்து வருகிறார்.
கார் ஓட்டுவதற்கு புதிய அமைப்பு கண்டு பிடிப்பு
அதன்படி, அவர் கண்டுபிடித்த புதிய அமைப்பை (பைக்கில் இருக்கும் கிளட் போன்ற அமைப்பு) காரில் பொருத்தினார். இந்த அமைப்பானது காரின் ஸ்டியரிங் அருகே பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம், முருகவேல் தனது காலை பயன்படுத்தாமல் கைகள் மூலம் கியரை மாற்றி காரை இயக்கலாம். மேலும், இந்த அமைப்பின் மூலம் காரின் பிரேக்கையும் கட்டுப்படுத்தலாம்.
மேலும் படிக்க: NRI சிறுவனை அதிர்ச்சியில் ஆழ்த்திய சென்னை உணவக பில்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..




கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிகள்
பைக்கில் உள்ள ஹேண்டில் பார் போல வடிவமைக்கப்பட்ட இந்த அமைப்பானது வலது கால் செயலிழந்த ஓட்டுநர்கள் இந்த அமைப்பின் மூலம் பயன் பெறலாம். இதே போல இடது கால் செயலிழந்த ஓட்டுநர்கள் கியர் அருகே பொருத்தப்பட்ட சென்சார் அடிப்படையிலான அமைப்பை பயன்படுத்தி வாகனத்தை இயக்கலாம்.
சென்சார் மூலம் பல்வேறு கட்டுப்பாட்டு வசதி
இதனால், காரின் கிளட்ச் அறை தானியங்கி முறையில் இயக்கப்படுகிறது. கையேடு கார்களில் கிளட்ச் செயல்பாடு பெரும்பாலும் இடது காலை பொருத்தது என்பதால், இந்த அமைப்பு கால் கட்டுப்பாடு இல்லாமல் சீராக ஓட்டும் நிலையை உறுதி செய்கிறது. இந்த சென்சார் செயலியின் மூலம் காரின் விளக்குகள், வைப்பர்கள் மற்றும் பிற செயல்பாடுகளை இயக்க முடியும்.
தானியங்கி கார்களில் மட்டும் செயல்படும் வசதி
இந்த வசதிகள் அனைத்தும் தானியங்கி கார்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கார் மெக்கானிக்கான செந்தில் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் கார்களை இயக்க முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது, மாற்றுத்திறனாளிகளும் கார்களை இயக்கும் வகையில் புதிய அமைப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகள் தங்களது ஓட்டுநர் பணியை தடை இன்றி தொடர முடியும். இந்த கண்டு பிடிப்புக்கு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் படிக்க: ஜனவரி முதல் வாரத்தில் கூடுகிறது தமிழக சட்டசபை.. பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்!!