Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

16 வயது மாணவனை திருமணம் செய்த பெண்… 3 மாத கர்ப்பம்… போக்சோவில் கைது

Thiruvannamalai Tragedy : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 16 வயது பள்ளி மாணவனை, கல்லூரி மாணவி வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் மாணவி கர்ப்பமான நிலையில், போக்சோவில் கைது செய்துள்ளார். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

16 வயது மாணவனை திருமணம் செய்த பெண்… 3 மாத கர்ப்பம்… போக்சோவில் கைது
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Oct 2025 11:02 AM IST

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக போக்சோ வழக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை (Thiruvannamalai) மாவட்டம் வந்தவாசி அருகே 16 வயது சிறுவனை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்த 19 வயது கல்லூரி மாணவி (College Student) மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. தற்போது அந்த பெண் 3 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களிடையே இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அரசு இதுகுறித்து பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

16 வயது மாணவனை திருமணம் செய்த பெண்

திருவண்ணாமலை அருகே வந்தவாசியில் 16 வயது பள்ளி மாணவனுக்கும், 19 வயது கல்லூரி மாணவிக்கும் சமூக வலைதளம் மூலம் காதல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கல்லூரி மாணவி கர்ப்பமான நிலையில், இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் மாணவனின் வீட்டுக்கு இந்த சம்பவம் தெரிய வர காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணை போக்சோவில் கைது செய்தனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க : மிட்டாய் வாங்கி தருவதாக மகள்களை அழைத்துச் சென்ற தந்தை.. அடுத்து நடந்த கொடூரம்.. பகீர் சம்பவம்!

தொடரும் போக்சோ வழக்குகள்

முன்னதாக திருவண்ணாமலை வந்தவாசியில் 17 வயது நர்சிங் மாணவிக்கும், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இந்த நிலையில் பெண்ணுக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அப்போது அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறைனரிடம் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கல்லூரி மாணவரை போக்சோவில் கைது செய்தனர்.

இதையும் படிக்க : அதிகரிக்கும் இரிடியம் மோசடி.. சிபிசிஐடி அதிரடி சோதனை.. 50 பேர் கைது..

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் போக்சோ சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களிடையே இது குறித்து விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களின் தாக்கம் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் இது தொடர்பாக மாணவர்களிடையே பேசி புரிய வைக்க வேண்டும். குறிப்பாக பள்ளிகளில் இது தொடர்பான வகுப்புகள் கட்டாயமாக்க வேண்டும். அவர்களுக்கு ஆண் – பெண் உறவு குறித்து புரிதல் ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.