தமிழகத்தை அச்சுறுத்தும் குழந்தை கடத்தல் சகோதரிகள்.. பெற்றோர்களே உஷார்!!
Child kidnapping: பெண் குழந்தைகள் ரூ.4 லட்சத்துக்கும், ஆண் குழந்தைகள் ரூ.5 லட்சத்துக்கும் விற்கப்படுகின்றனர். வாங்குபவர்களை முன்கூட்டியே தேர்வு செய்து, ஒழுங்காக தொடர்பு கொண்டு, யாருக்கும் தெரியாமல் குழந்தைகளை ஒப்படைத்து பணம் பெற்றுக் கொள்வார்கள். கடத்தி வரும் ஏஜென்ட்களுக்கு ரூ.1 லட்சம் வரை கமிஷன் தரப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பிரபலமான குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பெண்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களைப் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைகளை கடத்தும் கும்பல்களுக்கு எதிராக தமிழக போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்திய அளவில் செயல்படும் இந்த கும்பலில் 60க்கும் மேற்பட்ட நபர்கள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இந்த கும்பலில் சேர்ந்தவர்கள் ஒரு வலையமைப்பாக செயல்படுகின்றனர். பெரும்பாலும் வெளிமாநிலங்களில் குறிப்பாக அமதாபாத், மும்பை, புனே போன்ற நகரங்களை மையமாக கொண்டு செயல்படுகின்றனர். அங்குள்ள அரசு மருத்துவமனைகள், பிளாட்கள், பொது இடங்கள் போன்றவற்றிலிருந்து அதிக அளவில் குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல்கள தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : ரூ.1000 மதிப்பிலான பட்டுப்புடவை வெறும் ரூ.299 மட்டுமே…. பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி இணையதளம்… நூதன மோசடி
ரூ.5 லட்சம் வரை விற்பனை:
அவ்வாறு கடத்தப்படும் குழந்தைகள் ரெயில்கள் மூலம் தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகின்றனர். பெண் குழந்தைகள் ரூ.4 லட்சத்துக்கும், ஆண் குழந்தைகள் ரூ.5 லட்சத்துக்கும் விற்கப்படுகின்றனர். வாங்குபவர்களை முன்கூட்டியே தேர்வு செய்து, ஒழுங்காக தொடர்பு கொண்டு, யாருக்கும் தெரியாமல் குழந்தைகளை ஒப்படைத்து பணம் பெற்றுக் கொள்வார்கள். தற்போது இந்த கும்பலில் சேர்ந்தவர்களை சிறப்பு குழு போலீசார் பிடித்து வருகின்றனர்.




26 நாட்களாக நடந்த தேடுதல் வேட்டை:
இதனிடையே, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் – கீர்த்தனா என்ற நரிகுறவர் தம்பதி, ஈரோடு சித்தோடு பகுதியில், சேலம் – கொச்சின் நெடுஞ்சாலையில் இருக்கும் பாலத்திற்கு கீழே வசித்து வந்தனர். அங்கு, கொசு வலை போர்த்தி துாங்க வைக்கப்பட்டிருந்த இவர்களின் ஒன்றரை வயது பெண் குழந்தையை, மர்ம நபர்கள் கடந்த மாதம் கடத்திச் சென்றனர். தொடர்ந்து, 26 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வந்த சித்தோடு போலீசார், நாமக்கல் மாவட்டத்தில் குழந்தையை மீட்டனர்.
அடுத்ததடுத்து போலீசாரிடம் சிக்கிய கும்பல்:
இந்த கடத்தல் தொடர்பாக சேலத்தை சேர்ந்த ரமேஷ் (35) மற்றும் அவரது இரண்டாவது மனைவி நித்யா (30) கைது செய்யப்பட்டனர். இவர்கள் குழந்தையை கடத்தி விற்பனை செய்ததுடன், இவர்கள் பின்னணியில் கடத்தல் கும்பல் இருப்பதும் தெரியவந்தது. அதன்பேரில் நடந்த விசாரணையில, சேலத்தை சேர்ந்த ஜானகி (40) மற்றும் அவரது தங்கை செல்வி (36) கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 15 நாட்கள் ஆன பெண் குழந்தை மற்றும் 8 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டன. இவர்களுடன் சம்பந்தமுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர் பிரவீன் (35) கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : இனி மணிக்கு 80 கி.மீ வேகத்தில் சுங்கச்சாவடிகளை கடக்கலாம்.. விரைவில் வரப்போகும் அசத்தல் அம்சம்!
கடத்தல் கும்பல் தலைவிகளை தேடும் போலீசார்:
இந்த கும்பலின் தலைவிகளாக சென்னையை சேர்ந்த சபானா, அவரது சகோதரி ரேஷ்மா, மேலும் கொடைக்கானலை சேர்ந்த உமாமகேஷ்வரி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். தற்போது தலைமறைவாக உள்ள இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இம்மூவர் தலைமையில், 60 பேர் அடங்கிய கும்பல், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, குஜராத் மாநிலம் ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து, தமிழகத்திற்கு குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
குழந்தைகளை கடத்தி வரும் ஏஜென்ட்களுக்கு ரூ.1 லட்சம் வரை கமிஷன் தரப்படுவதாக கூறப்படுகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக கவனிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.