Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தாறுமாறாக ‘தார்’ காரை ஓட்டிய சிறுவன்.. பதற்றத்தில் ஏற்பட்ட விபத்து!!

Delhi Teen Rents Thar: வாகனங்கள் மீது பலமாக மோதி கார் நின்றுவிடவே, அதில் இருந்து இறங்கி சிறுவர்கள் இருவரும் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். ஆனால், அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்தின் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் பிற வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன.

தாறுமாறாக ‘தார்’ காரை ஓட்டிய சிறுவன்.. பதற்றத்தில் ஏற்பட்ட விபத்து!!
விபத்தை ஏற்படுத்திய சிறுவன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Dec 2025 13:55 PM IST

டெல்லியை சேர்ந்த சிறுவன் ஒருவன், பெற்றோருக்குத் தெரியாமல் மஹிந்திரா தார் காரை வாடகைக்கு எடுத்து நண்பர்களுடன் ஜாலியாக நகரை வளம் வந்துள்ளார். அப்போது குடும்பத்தாரை சாலையில் கண்ட சிறுவன், பதட்டமடைந்தோடு, கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியுள்ளான். இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவத்தில் சிறுவனையும், அவனது நண்பனையும் போலீசார் கைது செய்துள்ளனர். ரீல்ஸ் மற்றும் ஸார்ட்ஸ் வீடியோக்களில் அதிகம் வளம் வருவதும், விபத்துகளுக்கு பேசுபொருளாக இருப்பதுமான கார் தார். இந்த கார் மீது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலருக்கும், அதிக ஆர்வம் இருக்கும். அப்படி, சிறுவன் ஒருவன் கொண்ட ஆசையின் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. என்ன நடந்தது என்பதை இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : 10 பேரை பலி கொண்ட கோர விபத்து…சம்பவ இடத்தில் கேட்ட மரண ஓலம்…பேருந்து ஓட்டுநர் பரபரப்பு தகவல்!

வாடகைக்கு கார் எடுத்து ஓட்டிய சிறுவன்:

நோய்டா இஎஸ்ஐ மருத்துவமனை அருகே, செக்டர்–24 பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் அளித்த தகவலின்படி, தார் காரை ஓட்டி ரீல்ஸ் எடுக்க வேண்டுமென்ற மோகத்தில் இருந்த சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் வீட்டில் இருந்து திடீரென வெளியில் சென்றுள்ளான். தொடர்ந்து, வாடகைக்கு கார் வழங்கும் இடத்தில் இருந்து தார் காரை வாடகைக்கு எடுத்துள்ளான். உடன் தனது நண்பனையும் அழைத்துக்கொண்டு நகரை வளம் வந்துள்ளான்.

பெற்றோரை கண்டதும் பதறிய சிறுவன்:

இதனிடையே, சிறுவன் வீட்டிலிருந்து யாருக்கும் தகவல் சொல்லாமல் கிளம்பியதால், குடும்பத்தினர் அவனை பல்வேறு இடங்களிலும் தேடி அழைந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக சாலையில் குடும்பத்தாரைக் கண்டதும் பயந்து பதறிய சிறுவன், கவனம் சிதறியுள்ளான். இதில், கட்டுபாட்டை இழந்த கார், வேகமாக சென்று அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. அதோடு, சாலையில் நடந்துச் சென்ற ஒருவர் மீது மோதியது.

தப்பிச்செல்ல முயன்ற சிறுவன்:

தொடர்ந்து, வாகனங்கள் மீது பலமாக மோதி கார் நின்றுவிடவே, அதில் இருந்து இறங்கி சிறுவர்கள் இருவரும் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். ஆனால், அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்தின் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் பிற வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன.

இதையும் படிங்க : அசாமில் தொடரும் வன்முறை…இருவர் பலி…பதற்றம் அதிகரிப்பு!

இதனிடையே, விபத்தில் காயமடைந்த ரணா சிங் என்ற நபர் கூறும்போது, வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, வேகமாக வந்த கருப்பு நிற தார் கார் என் மீது மோதியது. தொடர்ந்து, காயமடைந்த என்னை அங்கிருந்த சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விபத்தை ஏற்படுத்திய அந்த கார், அதீத வேகத்தில் வந்துள்ளது என்றார். போலீசார் சிறுவனையும், அவன் நண்பரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, சம்பவத்திற்கு காரணமான தார் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.