Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அசாமில் தொடரும் வன்முறை…இருவர் பலி…பதற்றம் அதிகரிப்பு!

Assam Violence Between Two Communities : அசாம் மாநிலத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்டு வரும் தொடர் வன்முறையால் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் ஐபிஎஸ் அதிகாரி உள்பட 38 காவல் துறையினர் பலத்த காயம் அடைந்தனர்.

அசாமில் தொடரும் வன்முறை…இருவர் பலி…பதற்றம் அதிகரிப்பு!
அசாம் வன்முறையில் இருவர் உயிரிழப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 24 Dec 2025 17:28 PM IST

அசாம் மாநிலம், மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் 2- ஆவது நாளாக தொடர்ந்து வரும் வன்முறையில் போராட்டக்காரர்கள், வெளியாட்களை வெளியேற்றக் கோரி பழங்குடியினர் அல்லாதவர்களின் கடைகள் மற்றும் வீடுகளை தீ வைத்து சேதப்படுத்தினர். இதில், இருவர் கொல்லப்பட்டனர். மேலும், 45- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கர்பி சமூகத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் கெரோனியில் குண்டுகள், கற்கள் மற்றும் அம்புகளால் காவல் துறையினரை தாக்கினர். சில கிராமங்கள் மற்றும் வேலை பார்த்து வரும் வெளி ஆட்களை வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்ட பழங்குடியினர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். வன்முறையில் படுகாயமடைந்த ஒருவரும் உயிரிழந்தார்.

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் முதல்வர்

இது தொடர்பாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அமைதியை பேணுவதற்காக புதன்கிழமை கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறினார். மேலும், இரண்டு பேர் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது என்று தெரிவித்தார். இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கவும் சம்பந்தப்பட்ட அனைவருடனும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் என்று கூறினார்.

மேலும் படிக்க: தமிழ்நாடுதான் டாப்.. 4 மாநிலங்களில் மட்டும் 95 லட்சம் பேர் நீக்கம்.. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு விவரம்!

மாவட்டத்தில் 163- இன் கீழ் தடை உத்தரவு

கடந்த திங்கள்கிழமை மாலை முதல் மாவட்டங்களில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163- இன் கீழ் தடை உத்தரவுகள் அமலில் இருந்தபோதும் இந்த சம்பவங்கள் நிகழ்ந்தன. மாநில அரசு இரண்டு மாவட்டங்களிலும் இன்டர்நெட், செல்போன் சிக்னல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. திங்கட்கிழமை முதல் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஹர்மீத் சிங், போராட்டக்காரர்கள் தாக்கியதில், ஒரு ஐபிஎஸ் அதிகாரி உட்பட 38 காவல் துறையினர் காயமடைந்தனர். நேற்று வன்முறையில் ஈடுபட மாட்டோம் என்று உறுதியளித்திருந்த போராட்டக்காரர்கள் இன்று மீண்டும் கடைகளைத் தாக்கி எரிவாயு சிலிண்டர்களை வெடிக்கச் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை

போலீசார் மீது குண்டுகள் வீசப்பட்டன. அதில், காவலர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களை மட்டுமே வீசினோம் என்று கூறினார். திங்கட்கிழமை இரவு காவல்துறை இயக்குநரும், மாநில கல்வி அமைச்சர் ரனோஜ் பெகுவும் அந்தப் பகுதிகளுக்குச் சென்றபோது வன்முறை தணிந்திருந்தது. போராட்டக்காரர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். இருப்பினும், அமைச்சர் அந்தப் பகுதியை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே, செவ்வாய்க்கிழமை மீண்டும் வன்முறை வெடித்தது.

மேலும் படிக்க: செல்போன் வெளிச்சம்.. பிளேடு உதவி.. சாலை ஓரத்தில் நடந்த அறுவை சிகிச்சை.. கேரளாவில் பரபர சம்பவம்!