Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுபானம் என நினைத்து நச்சு ரசாயனம் குடித்த 4 பேர் பரிதாப பலி!

4 Died In Rajasthan Consumed Poisonous Chemical | ராஜஸ்தானில் திருமண விழாவுக்கு வேலை சென்றவர் அங்கிருந்த நச்சு ரசாயனத்தை மதுபானம் என நினைத்து குடித்த நிலையில், 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

மதுபானம் என நினைத்து நச்சு ரசாயனம் குடித்த 4 பேர் பரிதாப பலி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Feb 2026 23:32 PM IST

ஜெய்ப்பூர், பிப்ரவரி 13 : ராஜஸ்தானில் (Rajasthan) மதுபானம் என நினைத்து நச்சு ரசாயனத்தை குடித்த மூன்று பெண்கள் உட்பட 4 பேர் பரிதாமபாம உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்கு வேலைக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த ரசாயனத்தை மதுபானம் என நினைத்து வீட்டிற்கு எடுத்து வந்து குடித்த நிலையில், இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், மதுபானம் என நினைத்து ரசாயனம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மதுபானம் என நினைத்து நச்சு ரசாயணத்தை குடித்த 5 பேர்

ராஜஸ்தான் மாநிலம், பிஹில்வாரா மாவட்டம், அலோலி கிராமத்தில் பிப்ரவரி 10, 2026 அன்று திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் உணவு பரிமாற, தூய்மை பணிகளுக்கு சில ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர். அவ்வாறு திருமணத்தில் வேலை செய்வதற்காக வந்த ஊழியர்கள் சிலர் அங்கு பாட்டில்களில் வைக்கப்பட்டு இருந்த நச்சு ரசாயனத்தை மதுபானம் என நினைத்து தங்களின் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : நாடு முழுவதும் இன்று ஸ்டிரைக்.. என்னென்ன சேவைகள் பாதிக்கும், என்ன சேவைகள் கிடைக்கும்?

4 பேர் பலியான நிலையில் ஒருவருக்கு சிகிச்சை

வீட்டுக்கு சென்ற அவர்கள் அந்த நச்சு ரசாயனத்தை குடித்துள்ளனர். 4 பெண்கள் உட்பட 5 பேர் அந்த ரசாயனத்தை குடித்த நிலையில், அவர்களுக்கு உடனடியாக உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் சுசிலா (வயது 40), ஜாம்னி (வயது 60), படாமி (வயது 60) ஆகிய பெண்களும், ரத்தம் என்ற 42 வயது நபரும் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : கொட்டும் பனியில் பிரச வலியில் தவித்த கர்ப்பிணி.. தோலில் சுமந்து சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்!

தீவிர சிகிச்சை பெற்று வரும் பெண்

நச்சு ரசாயனம் கலந்த 5 பேரில் 4 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்த நிலையில், ஒரு பெண்ணுக்கு மட்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுபானம் என நினைத்து நச்சு ரசாயனத்தை குடித்து 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.