இண்டிகோ விமான ரத்து விவகாரம்…ஊழியர்களுக்கு சிஇஓ திடீர் கடிதம்!
IndiGo CEO Letter: இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி திடீர் கடிதத்தை எழுதி உள்ளார். அதில், பல்வேறு காரணங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் என்ன உள்ளது என்பதை பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த 3 நாள்களாக இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால், அந்த விமானங்களில் பயணம் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெருமளவில் அவதி அடைந்தனர். சில பயணிகள் விமான நிலையங்களில் விமான நிலைய ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் இடையேயான பிரச்சனையால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
இண்டிகோ சிஇஓ திடீர் கடிதம்
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது , அன்புள்ள இண்டிகோ ஊழியர்களே, கடந்த சில நாட்களாக இண்டிகோ வாடிக்கையாளர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கும் கடினமான நாள்களாக இருந்தன. நாங்கள் தினமும் சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு விமான சேவை வழங்கி வருகிறோம். எதிர்பாராதவிதமாக கடந்த சில நாட்களாக அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். சிறிய தொழில்நுட்ப சிக்கல்கள், அட்டவணை மாற்றங்கள், மோசமான வானிலை, அதிகரித்த விமான போக்குவரத்து மற்றும் புதிய எஃப்டிடிஎல் விதிமுறைகளை செயல்படுத்துதல்.
மேலும் படிக்க: ராணுவம் குறித்த சர்ச்சை கருத்து…ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை!
இண்டிகோ பணிகளை பாதித்த காரணம்
இவை அனைத்தும் எங்கள் பணிகளை வெகுவாக பாதித்தது. சூழ்நிலையை நிர்வகிக்கவும், தாக்கத்தை குறைக்கவும், அயராது உழைத்த அனைத்து செயல்பாடு குழுக்களுக்கும், விமானிகள் கேபிள் குழுவினர், ஓசிசி பொறியாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆதரவு, டிஜிட்டல் குழுக்கள், முன்னணி விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அவர்களின் தலைமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் தங்கள் முழு ஆதரவையும் வழங்கும் பிற தொழில் கூட்டாளிகளான விமான நிலையங்கள் ஏடிசி மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும் நன்றி.
வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைக்க உதவி
நாங்கள் இதற்கு முன்பு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். ஒவ்வொரு முறையும் சவால்களை வாய்ப்புகளாக மாற்றி எங்கள் வலிமை ஒற்றுமையை நிரூபித்துள்ளோம். இந்த முறையும் அதுவே உண்மையாக இருக்கும். இண்டிகோ வாடிக்கையாளர்களின் கவலைகள் மற்றும் சிரமங்களை நாங்கள் நன்றாக உணர்கிறோம். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை நாங்கள் தீவிரமாக தொடர்பு கொண்டு அவர்களின் சிரமத்தை குறைக்க அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம் என்று இண்டிகோ விமான நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார் .
மேலும் படிக்க:ரஷ்ய அதிபர் புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்த பிரதமர் மோடி!



