Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜபி நம்பர் பிளேட்டால் வந்த வினை…சிக்கலில் மாட்டிய தனியார் நிறுவன இயக்குநர்!

VIP Number Plate Auction: ஹரியானாவில் ரூ.1.17 கோடி மதிப்பிலான வி ஐ பி நம்பர் பிளேட்டை ஏலம் எடுத்த தனியார் நிறுவனத்தின் இயக்குநர் புதிய சிக்கலில் சிக்கி உள்ளார். அது என்ன சிக்கல், எவ்வாறு சிக்கினார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

விஜபி நம்பர் பிளேட்டால் வந்த வினை…சிக்கலில் மாட்டிய தனியார் நிறுவன இயக்குநர்!
விஜபி நம்பர் பிளேட்டால் வந்த வினை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 04 Dec 2025 10:51 AM IST

ஹரியானாவில் விஜபி நம்பர் பிளேட்டான “HR88B8888” என்ற இந்தியாவில் மிக விலை உயர்ந்த நம்பர் பிளேட் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் போக்குவரத்து சேவை ரோமுலஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் சுதீர் குமார் பங்கேற்று ரூ.1.17 கோடிக்கு இந்த நம்பர் பிளேட்டை ஏலம் எடுத்தார். அதன்படி, இந்த நம்பர் பிளேட்டுக்கான ஏலத் தொகையை கடந்த டிசம்பர் 1- ஆம் தேதி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் அதற்கான தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர் மீது சொத்து விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரூ.1.17 கோடி ஏலத் தொகையை செலுத்தாத நபர்

இது தொடர்பாக சுதீர் குமார் கூறுகையில், கடந்த 2 நாட்களாக ஏலத் தொகையை டெபாசிட் செய்ய முயற்சித்ததாகவும், ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொகையை டெபாசிட் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் அவர் மீது சொத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக ஹரியானா போக்குவரத்து துறை அமைச்சர் அணில் விஜ் கூறுகையில், ஹரியானாவில் விஐபி நம்பர் பிளேட்டுகளை ஏலம் மூலம் வழங்கி வருகிறோம். இந்த ஏலத்தில் பலர் “8888” என்ற எண்ணை ஏலம் எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க: சிறுத்தை திட்டம்.. இந்தியா லட்சிய முயற்சி வெற்றி – பிரதமர் மோடி

வருமான வரித்துறைக்கு கடிதம் எழுத முடிவு

இதே போல, “HR88B8888” என்ற நம்பர் பிளேட்டை ஏலம் எடுத்த சுதீர் குமார் அந்த தொகையை திருப்பி செலுத்தவில்லை. இதனால், சுமர் குமாரிடம் விஐபி நம்பர் பிளேட்க்கான ஏலத் தொகையான ரூ.1.17 கோடி பணம் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். மேலும், நிதி வசதி இல்லாமல் ஏலதாரர்கள் நம்பர் பிளேட்டின் விலையை அதிகரிப்பதை தடுப்பதற்காக விசாரணை கூறி வருமானவரித் துறைக்கு கடிதம் எழுத உள்ளதாகவும், இந்த நம்பர் பிளேட் மறு ஏலம் விடப்படும் என்று கூறினார்.

“HR88B8888” என்ற எண்ணில் என்ன சிறப்பு

HR88B8888 என்பது பிரீமியமாக வாங்கப்பட்ட ஒரு தனித்துவமான அல்லது விஐபி எண் ஆகும். “HR” என்பது இந்த வாகனம் ஹரியானாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதை குறிக்கிறது. “88” என்பது வாகனம் பதிவு செய்யப்பட்ட ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிராந்திய போக்குவரத்து அலுவலகம் அல்லது மாவட்டத்தை குறிக்கிறது. குறிப்பிட்ட பிராந்திய போக்குவரத்து அலுவலகத்துக்குள் வாகனத் தொடர் குறியீட்டை குறிக்க “B” பயன்படுத்தப்படுகிறது. 8888 என்பது வாகனத்துக்கு ஒதுக்கப்பட்ட தனித்துவமான நான்கு இலக்க பதிவு எண் ஆகும். “B” என்ற எண்ணெய் பெரிய எழுத்தில் எண்ணும்போது 8 எண்களின் சரம் போல தோற்றமளிப்பதும், ஒரே ஒரு இலக்கம் மட்டுமே திரும்பத் திரும்ப வருவதும் இந்த நம்பர் பிளேட்டின் சிறப்பாகும்.

மேலும் படிக்க: ஆதரவற்ற சிறுமி.. அடைக்கலம் கொடுப்பது போல் பாலியல் வன்கொடுமை செய்த மாமா!