Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பருத்தி தோட்டத்தில் சன்னி லியோன் பேனர் வைத்த விவசாயி.. வியக்க வைக்கும் காரணம்!

Farmer Kept Sunny Leone Banner In His Field | விவசாய தோட்டத்தில் பயிரடப்படும் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் பல்வேறு முயற்சிகளை எடுப்பர். ஆனால், பெங்களூருவை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது பருத்தி தோட்டத்தை பாதுகாக்க பாலிவுட் நடிகை சன்னி லியோன் பேனரை வைத்துள்ளார்.

பருத்தி தோட்டத்தில் சன்னி லியோன் பேனர் வைத்த விவசாயி.. வியக்க வைக்கும் காரணம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Dec 2025 10:07 AM IST

பெங்களூரு, டிசம்பர் 04 : பெங்களூரில் (Bengaluru) உள்ள நபர் ஒருவர் சொந்தமான விவசாய தோட்டம் வைத்துள்ள நிலையில், அதில் பயிர் செய்து வருகிறார். பயிரை காப்பாற்ற விவசாயிகள் பல்வேறு முறைகளை கையாளும் நிலையில், இவர் மிகவும் வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். அதாவது அவர் தனது தோட்டத்தில் பாலிவுட் நடை சன்னி லியோனின் பேனர் வைத்துள்ளார். இது அந்த கிராம மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், விவசாயி தனது விவசாய தோட்டத்தில் சன்னி லியோன் பேனர் வைத்தற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பயிர்களை காப்பாற்ற வித்தியாசமான முறையை கையாண்ட விவசாயி

இந்தியாவை பொருத்தவரை தோட்டத்தில் இருக்கும் பயிர்களை பறவைகள், விலங்குகள் உண்ணாமல் இருக்க பல வகையான எச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்வர். குறிப்பாக பட்டாசு வெடிப்பது, ஓலி எழுப்புவது, அச்சுறுத்தும் உருவங்களை கொண்ட பொம்மைகளை வைப்பது, வெள்ளை நிற கொடிகளை நட்டு வைப்பது உள்ளிட்ட செய்லகளை செய்வர். இவ்வாறு செய்வதன் மூலம் விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து பயிர்கள் பாதுகாக்கப்படும். இந்த நிலையில், பெங்களுரூவை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது பயிர்களை காப்பாற்ற வித்தியாசமான முறையை கையில் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க : ரயில்வே காவலர் மீது துப்பாக்கி சூடு…சக காவலர் வெறிச் செயல்…என்ன காரணம்!

தோட்டத்தில் சன்னி லியோன் பேனர் வைத்த விவசாயி

கர்நாடகா மாநிலம், முதனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஒருவர். அவர் தனது பருத்தி வயலின் நடுவே பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெரிய பேனர் ஒன்றை கட்டி வைத்துள்ளார். தனது பருத்தி பயிரை தீய பார்வை மற்றும் பொறாமையில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த செயலை அவர் செய்துள்ளார். விவசாயியின் இந்த செயல் அந்த கிராம மக்களிடையே பேசுபொருளாகா மாறியுள்ளது.

இதையும் படிங்க : 1,000 உயரம், 55 மீட்டர் நீளம்.. இந்தியாவின் மிகப்பெரிய கண்ணாடி பாலம் விசாகப்பட்டினத்தில் திறப்பு!

அந்த பேனர் தனது பயிர் மீது பொறாமைப்படும் நபர்களின் பார்வையை குறைக்கும் என்றும், அதிக மதிப்புள்ள பயிரை பாதுகாக்க உதவும் என்றும் தான் நம்புவதாக அந்த விவசாயி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.