Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செல்போன் வெளிச்சம்.. பிளேடு உதவி.. சாலை ஓரத்தில் நடந்த அறுவை சிகிச்சை.. கேரளாவில் பரபர சம்பவம்!

Man Saved By Roadside Surgery Dies Of Heart Attack | கேரளாவில் சாலை விபத்தில் சிக்கிய நபர் ஒருவரை அங்கிருந்த மருத்துவர்கள் சாலையோரத்தில் வைத்து அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய நிலையில், அந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகியுள்ளார்.

செல்போன் வெளிச்சம்.. பிளேடு உதவி.. சாலை ஓரத்தில் நடந்த அறுவை சிகிச்சை.. கேரளாவில் பரபர சம்பவம்!
இடது பக்கத்தில் இருப்பவர்கள் லினுவை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்களான தாமஸ் பீட்டர், திதியா, மானூப். வலது பக்கத்தில் இருப்பவர் உயிரிழந்த லினு
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Dec 2025 13:14 PM IST

கொச்சி, டிசம்பர் 24 : கேரள (Kerala) மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், உதயம்பேரூரில் சாலையோரத்தில் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சைக்கு பிறகு அவரது உடன்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த நிலையில், சாலையோரத்தில் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர் பலியான சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாலையோரத்தில் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர்

டிசம்பர் 20, 2025 அன்று உதயம்பேரூர் சந்திப்பில் பைக் மற்றும் ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லினு என்ற 40 வயது நபர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். அவர்களில் லினுவுக்கு அதிகப்படியான காயம் ஏற்பட்டு அவர் உயிருக்கு போராடியுள்ளார். இந்த நிலையில், அந்த பகுதியில் இருந்த மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்ற சாலையோரம் வைத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர் அவர் அங்கிருந்து சிகிச்சைக்காக கொச்சியில் உள்ல ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : உ.பியில் கணவனை கொலை செய்து கிரைண்டரில் உடல் பாகங்களை அரைத்த மனைவி.. வெளியான பகீர் தகவல்

திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாப பலி

மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிளேடு மூலம் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்

லினு விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், அவரது நுரையீரலில் த்தம் மற்றும் அழுக்கு புகுந்திருந்த நிலையில், அவர் மூச்சு விடுவதற்கு கடும் சிரமப்பட்டுள்ளார். இந்த நிலையில், அங்கிருந்த மருத்துவர்கள் தாமஸ் பீட்டர், திதியா மற்றும் மானூப் ஆகியோர் அவருக்கு அவசர சிகிச்சை வழங்கியுள்ளனர். பிளேடை பயன்படுத்தி அவரது கழுத்தில் துளையிட்டு அதன் வழியாக ஒரு ஸ்ட்ராவை செருகி அவர்கள் அவரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

இதையும் படிங்க : மாமாவின் கொலைக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்த்த சிறுவன்.. பகீர் சம்பவம்!

இவ்வாறு சாலையில் வைத்து அறுவை சிகிச்சை செய்து உயிர் காப்பாற்றப்பட்ட நபர், திடீர் மாரடைப்பில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.