Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.10-க்காக முதியவரை குத்தி கொலை செய்த சிறுவன்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Teen Stabs Man For 10 Rupees | ஆந்திராவில் மதுபான கடைக்கு அருகே நின்றுக்கொண்டு இருந்த நபரிடம் 17 வயது சிறுவன் ஒருவர் ரூ.10 பணம் கேட்டுள்ளார். அந்த பணத்தை அவர் தராத நிலையில், அவரை சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

ரூ.10-க்காக முதியவரை குத்தி கொலை செய்த சிறுவன்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Dec 2025 08:04 AM IST

அமராவதி, டிசம்பர் 20 : ஆந்திர பிரதேச (Andhra Pradesh) மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் டாடாஜி. 50 வயதாகும் இவர் தான் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ஒரு மதுபான கடை ஒன்றின் அருகில் நின்றுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது 17 வயது சிறுவன் ஒருவர் அங்கு வந்துள்ளார். டாடாஜி அங்கு நின்றுக்கொண்டு இருப்பதை கண்ட அந்த சிறுவன் அவரிடம் சென்று ரூ.10 தருமாறு கேட்டுள்ளார்.

ரூ.10-க்காக சிறுவன் செய்த வெறிச்செயல் – பகீர் சம்பவம்

சிறுவன் ரூ.10 கேட்ட நிலையில், அந்த நவர் சிறுவனுக்கு பணம் அவர் கேட்ட பணத்தை தர மறுத்துள்ளார். இதன் காரணமாக சிறுவன் மற்றும் டாடாஜிக்கு இடையே மிக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கடும் கோபத்திற்கு உள்ளான சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த நபரை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதையும் படிங்க : ரயில் பயணிகளே உஷார்…செல்போனில் இ-டிக்கெட்டுக்கு நோ…இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு!

சம்ப இடத்திலேயே பலியான நபர்

சிறுவன் கத்தியால் குத்திய நிலையில், டாடாஜி ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். கத்தி குத்தியதன் காரணமாக அவரது உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியுள்ளது. இந்த நிலையில், சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : 19 பேரை பலி வாங்கிய உபி சாலை விபத்து.. உடல்களை அடையாளம் காணுவதில் நீடிக்கும் சிக்கல்!

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்கள் மது மற்றும் கஞ்சா போதையில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், இதன் காரணமாக வெளியில் நடமாடுவதே மிகுந்த அச்சமாக உள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ள நிலையில், வெறும் ரூ.10-க்காக சிறுவன் ஒருவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.