Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரயில் பயணிகளே உஷார்…செல்போனில் இ-டிக்கெட்டுக்கு நோ…இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Indian Railways Not Accept Unreserved Tickets On Mobile: ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் தங்களது செல்போன்களில் காண்பிக்கும் ரயில் டிக்கெட்டுகள் இனி ஏற்கப்படாது என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு பதிலாக டிக்கெட் பிரதியை கையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளது.

ரயில் பயணிகளே உஷார்…செல்போனில் இ-டிக்கெட்டுக்கு நோ…இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு!
செல்போனில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் ஏற்க முடியாது
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 19 Dec 2025 10:47 AM IST

ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் தங்கள் ரயில் டிக்கெட்டுகளை செல்போனில் பதிவிறக்கம் செய்து பயணிக்கும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் மூலம், டிக்கெட் கவுண்டர்களில் வெகு நேரம் காத்திருக்கும் சூழல் தவிர்க்கப்பட்டதுடன், அவசர அவசரமாக ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் ஆகியோருக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு இந்தியன் ரயில்வே தற்போது தடை விதித்துள்ளது. அதாவது, முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் தங்களது ரயில் டிக்கெட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு ரயிலில் பயணிக்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அறிவுறுத்தி உள்ளது. எதற்காக இந்த திடீர் முடிவு என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஜெய்ப்பூரில் நடந்த சம்பவம்

நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடியை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியன் ரயில்வேயில் இந்த புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜெய்ப்பூரில் ஒரு ரயிலில் பயணித்த மாணவர்களிடம் டிக்கெட் பரிசோதகர், பயண சீட்டுகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த மாணவர்கள் செல்போனில் வைத்திருந்த டிக்கெட்டுகள் அனைத்தும் உண்மையான டிக்கெட்டுகள் போல தெரிந்தது.

மேலும் படிக்க: சபரிமலையில் ஏறிய தமிழக பக்தர் மாரடைப்பால் மரணம் – சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள்

ஆனால், ஒரு கட்டத்தில் டிக்கெட் பரிசோதகருக்கு அந்த டிக்கெட்டுகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், அந்த டிக்கெட்டுகளை ஆய்வு செய்த போது, அந்த டிக்கெட்டுகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு மூலம் (ஏ. ஐ) மூலம் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் தங்களது ரயில் டிக்கெட்டுகளை செல்போனில் காண்பிப்பதை தவிர்த்து, கைகளில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும்

அதன்படி, டிக்கெட் பரிசோதகர்களிடம் இந்த டிக்கெட்டுகளை காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல, இந்தியன் ரயில்வேயில் டிக்கெட்டுகள் தொடர்பான மோசடிகளை தடுக்க யூ. டி. எஸ். செல்போன் செயலி மற்றும் ஏ.டி.வி.எம்.கள் மற்றும் டிக்கெட் கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளின் அச்சிடப்பட்ட நகலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளது.

ரயில்வேயின் வருவாயை பாதுகாப்பது அவசியம்

இருப்பினும் இந்த விதி மின் டிக்கெட்டுகள் மற்றும் எம். டி.- கட் டிக்கெட்டுகளுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் இந்தியன் ரயில்வேயின் வருவாயை பாதுகாக்கவும், டிக்கெட் முறையின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மிக அவசியம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் ரூ.10.5 கோடி வீடு…அசர வைக்கும் பல்வேறு வசதிகள்!