சென்னை டூ ஆந்திரா வந்தே பாரத் ரயில் சேவை…நிறுத்தம்…கட்டணம் எவ்வளவு!
Chennai To Narsapur Vande Bharat Train: சென்னையில் இருந்து ஆந்திரா மாநிலம், நராசாபூருக்கு வந்தே பாரத் ரயில் சேவை இன்று திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்த ரயில் நின்று செல்லும் ரயில் நிலையங்கள், டிக்கெட் கட்டணங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் ரயில் பயணத்தை விரைவாக்கவும், பயணிகளின் பயண நேரத்தை குறைக்கவும் இந்தியன் ரயில்வே சார்பில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையே வந்தே பாரத் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் இருந்து ஆந்திரா மாநிலத்துக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ரயில் சேவை நரசாபூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் நராசாப்பூர் வரை வந்தே பாரத் ரயில் சேவை இன்று திங்கள்கிழமை (டிசம்பர் 15) தொடங்கப்பட்டது.
நரசாபூர்-சென்னை வந்தே பாரத் ரயில்
இந்த ரயிலானது வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிற 6 நாட்கள் இயக்கப்பட உள்ளன. 20678- என்ற எண் உடைய வந்தே பாரத் ரயிலானது இன்று முதல் நராசாபூர்- சென்னை வழித்தடத்தில் அறிமுகப்படுத்தப்படும் முதல் ரயிலாகும். இதே போல, 20677- என்ற எண் உடைய வந்தே பாரத் ரயிலானது சென்னையில் இருந்து நரசாபூருக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது இந்த வார இறுதியில் தனது பயணத்தை தொடங்க உள்ளது கூறப்படுகிறது.
மேலும் படிக்க : டெல்லியில் காற்று மாசால் மூச்சு விடவே சிரமப்படும் மக்கள்.. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்!




605 கிலோ மீட்டர் தொலைவை 9 மணி நேரத்தில் கடக்கும்
சென்னை- நரசாபூருக்கு இடையேயான 605 கிலோ மீட்டர் தொலைவை இந்த வந்தே பாரத் ரயிலானது 8 மணி நேரம் 55 நிமிடங்களில் கடக்கும். இது தினசரி பயணிகள், வணிக பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயிலானது ரேணிகுண்டா சந்திப்பு, நெல்லூர், ஓங்கோல், தெனாலி சந்திப்பு, விஜயவாடா சந்திப்பு, குடிவாடா சந்திப்பு மற்றும் பீமாவரம் டவுன் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் கட்டணம்
ஆந்திர மாநிலம், நரசாபூரிலிருந்து பிற்பகல் 2:50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயிலானது இரவு 11:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இதே போல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5:30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயிலானது அன்று பிற்பகல் 2:10 மணிக்கு நரசாபூருக்கு சென்றடையும். இந்த ரயிலில் ஏசி சேர் காருக்கு ரூ.1,635 மற்றும் எக்ஸிக்யூட்டிவ் சேர் காருக்கு ரூ. 3,030 என டிக்கெட் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இந்த ரயிலால் பள்ளி, கல்லூரி மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த பயனடைவார்கள்.
மேலும் படிக்க: சிட்னி தாக்குதல்…யூத நிறுவனங்களுக்கு இந்தியா உயர்மட்ட எச்சரிக்கை!