Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருவனந்தபுரம் மாநகராட்சி இடைத்தேர்தல்.. கேரள அரசியலில் ஒரு தீர்க்கமான தருணம் – பிரதமர் மோடி..

PM Modi: ''திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனையாகும். மாநிலத்தின் வளர்ச்சி விருப்பங்களை எங்கள் கட்சியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர் என பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருவனந்தபுரம் மாநகராட்சி இடைத்தேர்தல்..  கேரள அரசியலில் ஒரு தீர்க்கமான தருணம் – பிரதமர் மோடி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 13 Dec 2025 17:56 PM IST

திருவனந்தபுரம், டிசம்பர் 13, 2025: கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கொடியை ஏற்றியுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் உள்ள 101 வார்டுகளில் 50 வார்டுகளை வென்று பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. இது ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆகியவற்றுக்கு பெரும் அடியாக அமைந்தது. 101 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 50 வார்டுகளை வென்றாலும், எல்டிஎஃப் 29 வார்டுகளை வென்றது. யுடிஎஃப் 19 வார்டுகளை வென்றது. இரண்டு வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.

திருவனந்தபுரத்தில் பாஜகவின் பலத்தை வெளிப்படுத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறி, நன்றி தெரிவித்தார். கேரள அரசியலில் இது ஒரு முக்கிய திருப்புமுனை என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

மக்களின் வளர்ச்சிக்காக இனி பாஜக பாடுபடும் – பிரதமர் மோடி:


இது தொடர்பான பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ ”திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனையாகும். மாநிலத்தின் வளர்ச்சி விருப்பங்களை எங்கள் கட்சியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்த துடிப்பான நகரத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் ‘வாழ்க்கை எளிமையை’ மேம்படுத்துவதற்காகவும் எங்கள் கட்சி பாடுபடும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: தேங்காய் விவசாயிகளுக்கான சூப்பர் நியூஸ்.. தோள் கொடுக்கும் பிரதமர் – நயினார் நாகேந்திரன்..

மேலும், “ திருவனந்தபுரம் மாநகராட்சியில் சிறந்த முடிவை அடைய மக்களிடையே உழைத்த அனைத்து கடின உழைப்பாளி பாஜக தொண்டர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். கேரளாவில் அடிமட்டத்தில் உழைத்த பல தலைமுறை தொழிலாளர்களின் முயற்சிகள் மற்றும் போராட்டங்களை நினைவுகூரும் நாள் இன்று” என்று பிரதமர் மோடி கூறினார்.

கம்யூனிஸ்ட் கோட்டையில் நுழைந்த பாஜக:

இதற்கிடையில்.. திருவனந்தபுரத்தில், 2020 தேர்தலில் எல்.டி.எஃப் 52 வார்டுகளை வென்றது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ 33 வார்டுகளையும், யு.டி.எஃப் 10 வார்டுகளையும் வென்றது. இருப்பினும்.. கேரள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில்… சமீபத்திய திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலில் பாஜகவின் வெற்றி முக்கியத்துவம் பெற்றுள்ளது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கோட்டையில் பாஜக நுழைவது அரசியல் வட்டாரங்களில் ஆர்வத்தை உருவாக்கி வருகிறது.