Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தேங்காய் விவசாயிகளுக்கான சூப்பர் நியூஸ்.. தோள் கொடுக்கும் பிரதமர் – நயினார் நாகேந்திரன்..

Coconut Farmers: 2018–19 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, அனைத்து பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, உற்பத்தி செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்படும். அதன்படி, 2026 பருவத்திற்காக நியாயமான சராசரி கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.12,277 ஆகவும், பந்து கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.12,500 ஆகவும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் விவசாயிகளுக்கான சூப்பர் நியூஸ்.. தோள் கொடுக்கும் பிரதமர் – நயினார் நாகேந்திரன்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Dec 2025 16:25 PM IST

டிசம்பர் 13, 2025: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டிசம்பர் 12, 2025 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026 பருவத்திற்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தென்னை விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியை அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு லாபம் தரும் விலையை உறுதி செய்யும் வகையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து, கொப்பரை உற்பத்தியை பெருக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தென்னை விவசாயிகளுக்கு தோள் கொடுக்கும் பிரதமர் மோடி” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: மழையும் இருக்கு பனியும் இருக்கு.. சென்னையில் எப்படி? வானிலை ரிப்போர்ட் இதோ..

கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை:

2018–19 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, அனைத்து பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, உற்பத்தி செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்படும். அதன்படி, 2026 பருவத்திற்காக நியாயமான சராசரி கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.12,277 ஆகவும், பந்து கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.12,500 ஆகவும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை, முந்தைய பருவத்தை விட அரைக்கும் கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.445 மற்றும் பந்து கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.400 அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் பொருட்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும்:

இந்த விலை உயர்வு காரணமாக தேங்காய் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, தேங்காய் பொருட்களுக்கு அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய விவசாயிகள் அதிகமாக கொப்பரை உற்பத்தி செய்ய முன்வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொப்பரை கொள்முதல் பணிகளை அரசு தரப்பில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுரை நகர திட்டத்தில் மிகப் பெரிய ஊழல்…செல்லூர் ராஜூ பகீர்!

தென்னை விவசாயிகளுக்கு தோள் கொடுக்கும் பிரதமர் – நயினார் நாகேந்திரன்:


இந்த சூழலில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வெள்ளை ஈ தாக்குதலாலும், நோய்த் தாக்கங்களாலும் பாதிக்கப்பட்டு வரும் தென்னை விவசாயிகளின் துயரைத் துடைத்து, அவர்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் வகையில் கொப்பரை தேங்காயின் ஆதரவு விலையை உயர்த்திய பிரதமர் அவர்களுக்கு, விவசாயிகள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.