Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மதுரை நகர திட்டத்தில் மிகப் பெரிய ஊழல்…செல்லூர் ராஜூ பகீர்!

Madurai City Project Huge Corruption: மதுரை நகர திட்டத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும், இந்த ஊழலில் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை நகர திட்டத்தில் மிகப் பெரிய ஊழல்…செல்லூர் ராஜூ பகீர்!
மதுரை நகர திட்டத்தில் ஊழல்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 13 Dec 2025 12:14 PM IST

இது தொடர்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை மாநகராட்சி ஆணையராக புதிதாக நியமிக்கப்பட்டவர் தொடக்க காலத்தில் நல்ல முறையில் பணியாற்றி வந்தார். தற்போது, அவர் திமுக அரசின் அடிமைகளில் ஒருவராக மாறிவிட்டார். இதனால், மதுரையில் சரியான முறையில் நிர்வாகம் நடைபெறவில்லை. மதுரையில் குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள், வணிக கட்டிடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றுக்கு முறையான வரி விதிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக நீதியரசர் குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த குழுவானது சுமார் ஒரு வாரம் சிறப்பாக செயல்பட்ட நிலையில் ரூ. 25 கோடி வரி விதிப்பில் முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டது.

வரி விதிப்பு முறைகேடு விவகாரம் எந்த நிலையில் உள்ளது

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 19 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு அந்த விவகாரம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அண்மையில் மதுரையில் முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதில், முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வரும் தண்ணீரானது சாக்கடை நீர் கலந்து வருகிறது.

மேலும் படிக்க: முடிவை மாற்றிய ஓபிஎஸ்.. டிச.15ல் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு.. டெல்லி பயணம் காரணமா?

முழுமை பெறாத திட்டங்கள் தொடங்கி வைப்பு

மாநகராட்சி பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு முறையான தண்ணீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. பொதுவாக இது போன்ற திட்டங்களை அந்தப் பகுதிகளில் அமைச்சர்கள் முறையாக ஆய்வு செய்து முழுமை பெற்ற திட்டங்களை முதல்வர் தொடங்கி வைப்பது வழக்கமாகும். ஆனால், இந்த திட்டங்கள் அனைத்தும் முழுமை பெறாமல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம்

எனவே, மதுரை மாநகராட்சியை கண்டித்து விரைவில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சியில் வரிக்கு மேல் வரி விதிக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. இந்த மாநகராட்சியுடன் மேலும் சில ஊராட்சிகளை சேர்ப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நகர திட்டமயமாக்கலில் மிகப்பெரிய ஊழல்

நகர திட்டமயமாக்களில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சி அமைந்து நாலே முக்கால் ஆண்டுகளில் மதுரை மக்களுக்காக ஒரு திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. கோரிப்பாளையம் பாலம் உள்ளிட்டவை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் ஆகும்.

கைவிடப்பட்ட மதுரை விமான நிலையம்

திமுக ஆட்சி அமைந்தவுடன் அடுத்த இரு மாதங்களில் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது வரை அதற்கான எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் – மக்கள் உண்ணாவிரத போராட்டம்