திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் – மக்கள் உண்ணாவிரத போராட்டம்
Thiruparankundram Protest: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பரங்குன்றம் மக்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியது. இதனையடுத்து டிசம்பர் 13, 2025 அன்று சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தை திருப்பரங்குன்ற மக்கள் தொடங்கியுள்ளனர்.
மதுரை, டிசம்பர் 13: திருப்பரங்குன்றம் (Thiruparankundram) மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பரங்குன்றம் மக்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உயர்நீதிமன்ற (High Court) மதுரைக் கிளை அனுமதி வழங்கியது. இதனையடுத்து டிசம்பர் 13, 2025 அன்று சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தை திருப்பரங்குன்ற மக்கள் தொடங்கியுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பொது மக்கள் சார்பில் டிசம்பர் 13, 2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி
இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக திருப்பரங்குன்றம் மலை மீது உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி கிராம மக்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு அமைதியான முறையில் அனுமதி வழங்கி நீதிமன்றம் டிசம்பர் 12, 2025 அன்று உத்தரவிடப்பட்டது.
இதையும் படிக்க : டெல்டா, தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!
முன்னதாக காவல்துறையினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்திருந்தனர். இந்த நிலையில் நீதிமன்றம் 50 பேர் மட்டும் கலந்துகொள்ள வேண்டும். தனி நபரையோ, அரசியல் கட்சியினரையோ தாக்கி பேசக் கூடாது. கட்சி கடிகளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊர் மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் கிராம மக்கள்
#WATCH | Madurai, Tamil Nadu: Villagers of Thiruparankundram stage hunger strike, demanding that the deepam should be lit atop the Thiruparankundram hill. pic.twitter.com/tDZR74uFBy
— ANI (@ANI) December 13, 2025
இதையும் படிக்க : கிறிஸ்துமஸ் லீவுக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே – எப்போ தெரியுமா?
திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிராக கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான டிசம்பர் 12, 2025 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், தர்காவின் அருகில் உள்ள தூண் தீபத்தூண் அல்ல, அது சர்வே அளவு தூணாக இருக்கலாம் எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வருகிற டிசம்பர் 15, 2025 அன்று ஒத்தி வைத்தனர்.



