Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கிறிஸ்துமஸ் லீவுக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே – எப்போ தெரியுமா?

Special Trains for Christmas Holidays: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தெலங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருவுக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

கிறிஸ்துமஸ் லீவுக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே – எப்போ தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 13 Dec 2025 07:36 AM IST

சென்னை, டிசம்பர் 13: சேலம் (Salem) வழியாக மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் (Christmas) மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கும், அரசு அலுவலங்களுக்கும் தொடர் விடுமுறை விடப்படும். இதனை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்வது வழக்கம். இதனால் ரயில்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அதனை சமாளிக்க சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  தெலங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து மங்களூருவுக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்ப்டுள்ளன. அது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தெலங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருவுக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில்  போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும் அந்த பகுதி மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்க : தவெகவில் இணைகிறாரா காளியம்மாள்…அவரது நிலைப்பாடு என்ன!

வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி சார்லபள்ளி  – மங்களூர் சிறப்பு ரயிலானது தெலங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 8.23 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து சரியா 8.25 மணிக்கு புறப்பட்டு, ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக டிசம்பர் 26, 2025 அன்று காலை 6.55 மணிக்கு மங்களூர் சென்றடையும்.

சேலம் வழியாக சார்லபள்ளி – மங்களூர் சிறப்பு ரயில்

அதே போல, மங்களூர் – சார்லபள்ளி சிறப்பு ரயில் டிசம்பர் 26, 2025 அன்று மங்களூர் ஜங்சனில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக காலை 8.40 மமிக்கு சேலம் வந்தடையும், பிறகு அங்கிருந்து காலை சரியாக 8.43 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, வழியாக மாலை 5 மணிக்கு சார்பலபள்ளி  வந்தடையும்.

இதையும் படிக்க : குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்…திறப்புக்கு நாள் குறித்த இஸ்ரோ தலைவர்!

மேலும் சார்லப்பள்ளி – மங்களூர் சிறப்பு ரயில் டிசம்பர் 28. 2025 இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழயாக மறுநாள் காலை 8.23 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் அங்கிருந்து காலை 8.25 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக டிசம்பர் 30, 2025 அன்று காலை 6.55 மணியளவில் மங்களூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும்.

அதனைத் தொடர்ந்து மங்களூரு சென்ட்ரல் – சார்லபள்ளி சிறப்பு ரெயில், டிசம்பர் 30, 2025 அன்று மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை சரியாக 9.55 மணிக்கு புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் டிசம்பர் 31, 2025 அன்று மாலை சரியாக 5 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.