Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்த 23 நாட்களும் ரேசன் கடைகள் இயங்காது – வெளியான முக்கிய அறிவிப்பு

Holiday for Ration Shops: 2026 ஆம் ஆண்டு துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அடுத்த ஆண்டில் ரேசன் கடைகளுக்கான விடுமுறை நாட்களை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நூகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த 23 நாட்களும் ரேசன் கடைகள் இயங்காது  – வெளியான முக்கிய அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Dec 2025 18:43 PM IST

சென்னை, டிசம்பர் 12 : மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய மாநில அரசுகள் குறைந்த விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேசன் கடைகளின் (Ration Shop) வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் எளிய மக்களின் உணவு தேவைகள் பெருமளவில் குறைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 7 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் 2026 புத்தாண்டு துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அடுத்த ஆண்டில் ரேசன் கடைகளுக்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரேசன் கடைகளுக்கு விடுமுறை

ரேசன் கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்கப்படும் பொருட்களால் தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நூகர்வோர் பாதுகாப்புத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி வருகிற 2026 ஆம் ஆண்டு பொங்கல், தீபாவளி, ரம்ஜான் என ரேசன் கடைகளுக்கு 23 நாட்கள் விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : எஸ்ஐஆர்-இல் மீண்டும் குளறுபடி…ஆள் இல்லாத கிராமத்தில் 800 பேர் இருப்பதாக பதிவு!

அதன் படி ஜனவரி 1, வியாழக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 15, 2026, பொங்கல் பண்டிகை, ஜனவரி 16, 2026 திருவள்ளுவர் தினம், ஜனவரி 17, 2026 சனிக்கிழமை உழவர் தினம், ஜனவரி 26, 2026 திங்கள் கிழமை குடியரசு தினம், பிப்ரவரி 1, 2026 தைப்பூசம், மார்ச் 19, 2026 அன்று வெள்ளிக்கிழமை புனித வெள்ளி, ஏப்ரல் 14, 2026 செவ்வாய் கிழமை தமிழ் புத்தாண்டு ஆகிய நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து மே 1, 2026, உழைப்பாளர் தினம், மே 28, 2026 வியாழக்கிழமை பக்ரீத பண்டிகை, ஜூன் 26, 2025 அன்று வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகை, ஆகஸ்ட் 15, 2026 சுதந்திர தினம், ஆகஸ்ட் 26, 2026 புதன் கிழமை மிலாடி நபி, செப்டம்பர் 4, 2024 வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, செப்டம்பர் 14, 2026 திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2, 2026 வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி, அக்டோபர் 19, 2026 திங்கள் கிழமை ஆயுத பூஜை, அக்டோபர் 20, 2026 விஜய தசமி, நவம்பர் 8, 2026 ஞாயிற்றுக் கிழமை தீபாவளி பண்டிகை, டிசம்பர் 26, 2026 வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் என மொத்தம் 23 நாட்களுக்கு ரேசன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மத்திய கைலாஷில் மேற்கொள்ளப்படும் மேம்பால பணிகள்.. 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..

ரேசன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,  பொங்கல் பரிசாக ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 பொங்கல் பரிசாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  பொங்கல் வைப்பதற்காக ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.