Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊர் போறீங்களா? சிறப்பு ரயில் அறிவிப்பு – எப்போ தெரியுமா?

Special Train Alert : கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தெற்கு ரயில்வே சிறப்பு ரசில்களை அறிவித்துள்லது. இந்த ரயில்கள் பயணிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊர் போறீங்களா? சிறப்பு ரயில் அறிவிப்பு – எப்போ தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 19 Dec 2025 07:48 AM IST

கிறிஸ்துமஸ் (Christmas) மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் விரவிருக்கிற நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். மேலும் பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை மற்றும் அரசு அலுவலகங்களில் தொடர் விடுமுறை வருவதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் செல்ல திட்டமிடுவர். இதனால் ரயில்களில் (Train) கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இதை சமாளிக்க, கர்நாடகா மாநிலம்  மைசூரு முதல் தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மைசூரு மற்றும் தூக்குக்குடி இடையே சிறப்பு ரயில்

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 23, 2025 மற்றும் டிசம்பர் 27, 2025 ஆகிய தேதிகளில் கர்நாடகா மாநிலம் மைசூரு மற்றும்  தூத்துக்குடி இடையே ரயில் எண் 06283 என்ற  சிறப்பு ரயில்  அறிவிக்கப்பட்டுள்ளது. மைசூரு ரயில் நிலையத்தில் இருந்து மாலை சரியாக 6.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அடுத்த நாள் காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இந்த ரயில் தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.  இதனை அப்பகுதி வழியாக பயணிப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதையும் படிக்க : புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – முதல்வர் அறிவிப்பு

தெற்கு ரயில்வே வெளியிட்ட பதிவு

 

இந்த நிலையில் மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து 06284 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் டிசம்பர் 24, 2025 மற்றும் டிசம்பர் 28 ஆகிய 2 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு கிளம்பி அடுத்த நாள் காலை 7.45 மணிக்கு மதுரை வந்தடையும். இதன் மூலம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பயணிப்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்க : இறுதிக்கட்டத்தை எட்டிய SIR பணிகள்.. படிவங்களை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்.. மக்களே கடைசி வாய்ப்பு!!

இதற்கான முன்பதிவு டிசம்பர் 10, 2025 அன்று காலை 8 மணி முதல் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்கள் மூலமாகவோ இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ முன்பதிவு செய்துள்ளலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.