Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிமுக பொதுக்குழுவில் 8 தீர்மானம் நிறைவேற்றம்…அவை என்னென்ன!

Resolutions passed at the AIADMK general meeting: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகவே தலைமை வகிக்கும், எடப்பாடியை மீண்டும் முதல்வர் ஆக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக பொதுக்குழுவில் 8 தீர்மானம் நிறைவேற்றம்…அவை என்னென்ன!
அதிமுக பொதுக்குழு கூட்டம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 10 Dec 2025 11:43 AM IST

சென்னை, வானகரம் பகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம் இன்று புதன்கிழமை (டிசம்பர் 10) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் முன்மொழிந்தார். இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தீர்மானத்தை வழிமொழிந்தார். பின்னர், சட்டப்பேரவை எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயக்குமார் வாசித்தார்.

தேஜ கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கும்

இந்த தீர்மானத்தில், 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கும். அதிமுக தலைமையின் கீழ் இடம் பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரமும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கப்படுகிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய அளவிலான கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜக தமிழ்நாட்டில் அதிமுகவின் தலைமையை ஏற்றுள்ளது. அதிமுக கூட்டணியின் ஒரே நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதே ஆகும். இந்த இலக்கை நோக்கி பயணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியில் சில கட்சிகள் தொடர்ந்து வருகின்றன.

மேலும் படிக்க: இறுதிக்கட்டத்தை எட்டிய SIR பணிகள்.. படிவங்களை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்.. மக்களே கடைசி வாய்ப்பு!!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும்

தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி, அரசியல் பொது எதிரியான திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகள், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற மன நிலையில் உள்ள மேலும் சில கட்சிகள் அதிமுக- பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில் கூட்டணியில் சேரும் கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கத்தை புரிந்து கொண்டவர்களாகவும், கூட்டணியின் தலைமையை ஏற்றுக் கொள்பவராகவும், கூட்டணியின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு முழு மனதோடு ஒத்துழைப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு முழு அதிகாரம்

அதன் அடிப்படையில் கூட்டணியில் எந்த கட்சியை சேர்க்க வேண்டும். எந்த கட்சியை சேர்க்க வேண்டாம் என்பது தொடர்பான முடிவு எடுக்கும் முழு அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமிக்கு இந்த பொதுக்குழு வழங்குகிறது. தீய சக்தி திமுகவை வீழ்த்துவதற்கு ராஜதந்திரமான தேர்தல் வியூகம் அமைத்து அதிமுக பாஜக கூட்டணி தேர்தலை சந்திக்கும். எடப்பாடி பழனிசாமியை 2026-இல் மீண்டும் முதல்வர் ஆக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. டிச.12ல் வருகிறது மாற்றம்.. அரசு சொன்ன குட் நியூஸ்!!