Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. டிச.12ல் வருகிறது மாற்றம்.. அரசு சொன்ன குட் நியூஸ்!!

Magalir urimai thogai: தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. இந்த சமயத்தில் பெண்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பலை, தேர்தல் முடிவுகளை பாதிக்கக்கூடும் என்று எண்ணிய அக்கட்சி விடுப்பட்ட பெண்களுக்கு ரூ.1000 வழங்குவதற்காக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. டிச.12ல் வருகிறது மாற்றம்.. அரசு சொன்ன குட் நியூஸ்!!
கோப்புப் படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 10 Dec 2025 10:49 AM IST

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்டம் வரும் 12ஆம் தேதி முதல் தகுதி பெற்ற கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக, மகளிர் மேம்பாட்டிற்காக அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அக்கட்சி, 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கியது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. எனினும், தொடக்கத்தில் தகுதியுடைய பெண்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் எனக்கூறி லட்சக்கணக்கான பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

மேலும் படிக்க: புதுச்சேரி அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்…தவெக தலைவர் விஜய் கடும் தாக்கு!

பெண்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பலை:

தொடர்ந்து, விடுப்பட்டவர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பயனர்களை கண்டறிந்து உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சியினர் உறுதி அளித்து வந்தனர். எனினும், அப்படியும் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலை எழுந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. இந்த சமயத்தில் பெண்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பலை, தேர்தல் முடிவுகளை பாதிக்கக்கூடும் என்று எண்ணிய அக்கட்சி விடுப்பட்ட பெண்களுக்கு ரூ.1000 வழங்குவதற்காக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சில விதிகளை தளர்த்தி சிறப்பு முகாம்களை நடத்தி, இன்னும் அதிகமான மகளிரை இத்திட்டத்தில் இணைக்க நடவடிக்கைகள் எடுத்தனர்.

விதிகளை தளர்த்திய அரசு:

அதன்படி, நவ.15ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து, வருவாய்த்துறையினர் தீவிரமாக கள ஆய்வு செய்தனர். இதையடுத்து, அரசு ஊதியம் பெறும் குடும்பம், வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மீதமுள்ள அனைத்து குடும்ப பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் வகையில் தளர்வு மேற்கொள்ளப்பட்டு, பெண்களின் விண்ணப்பங்களை நிராகரிக்காமல் பணிகள் நடக்கின்றன. இந்த பணி நவம்பரில் முடிவடைந்த நிலையில், மீண்டும் விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15 முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.

மேலும் படிக்க: முதல்வர் பதவியில் விஜய் உறுதியாக அமருவார்…புஸ்ஸி ஆனந்த்!

விடுப்பட்ட பெண்களுக்கும் ரூ.1000:

இந்நிலையில், சிறப்பு முகாம்கள் மூலம் மீண்டும் விண்ணப்பித்தவர்களில், தகுதியானவர்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, இதுதொடர்பான நிகழ்ச்சி சென்னை நேரு உள்ள விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.