Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு”.. எடப்பாடி பழனிசாமி தாக்கு!!

Edappadi K Palaniswami: எம்மதமும் சம்மதம் - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

“தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு”.. எடப்பாடி பழனிசாமி தாக்கு!!
எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 05 Dec 2025 07:44 AM IST

மதுரை, டிசம்பர் 05: திருப்பரங்குன்றம் (Thiruparankundram) மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, திமுக அரசு பதற்றத்தை உண்டாக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் நேற்று 2வது முறையாக உத்தரவிட்டும், போலீஸார் அனுமதி வழங்க மறுத்தனர். அதாவது, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதால், யாரையும் மலை உச்சிக்கு அனுமதிக்க முடியாது என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதன் காரணமாக கோவில் முன்பு திரண்ட பாஜகவினர், இந்து அமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டதால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தொடர்ந்து, போலீசார் நேற்றிரவு அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து பின்னர் இரவு 11 மணிக்கு மேல் விடுவித்துள்ளனர்.

மேலும் படிக்க:  திருப்பரங்குன்றம் விவகாரம்… அரசின் மனுவில் மறைமுக நோக்கம்…. நிராகரித்த நீதிமன்றம்

2 நாட்களாக தேவையில்லாத பதற்றம்:

இந்நிலையில், உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை திமுக அரசு ஏற்படுத்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதோடு, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது என கங்கணம் கட்டிக்கொண்டு, சட்ட நிர்ணயங்களுக்கு முற்றிலும் விரோதமான அரசாக தன்னை நிரூபித்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்துறை என்றும் சாடியுள்ளார்.

கைதுக்கு கடும் கண்டனம்:

மேலும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பக்தர்கள் அனைவரையும் அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ள அவர், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறதா இந்த பொம்மை முதல்வரின் அரசு? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் ஆதாயம் தேடும் அரசு:

அதோடு, உயர்நீதிமன்றத்தின் இரு அமர்வுகள் அளித்த உத்தரவுக்குப் பிறகும், திமுக ,அரசு இயந்திரத்தை பயன்படுத்தி இப்படி அடாவடித்தனத்தை கையாள்வதன் மூலம், இதை வேண்டுமென்றே பெரிய பிரச்சனையாக்கி, தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் நோக்கில், தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக குளிர்காயத் துடிப்பது தெள்ளத்தெளிவாகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

துணைபோகும் அதிகாரிகள்:

தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுக்குப் பிறகும், ஆட்சியில் இருக்கும் விடியா திமுக-வை மகிழ்விக்கவோ என்னவோ, சில அதிகாரிகளும் இத்தகைய நீதிமன்ற அவமதிப்பு செயல்களுக்கு துணைபோவது வருத்தமளிக்கிறது. இத்தகைய செயல்கள், கடும் கண்டணத்திற்குரியது என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: சென்னையில் இன்று மட்டும் தான் மழை இருக்கும்.. நாளை முதல் மழைக்கு ப்ரேக் – வெதர்மேன் பிரதீப் ஜான்..

மேலும், மக்களாட்சி விழுமியங்களை நசுக்கும் அராஜகப் போக்கை உடனடியாக கைவிட்டு, கைது செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுமாறும் வலியுறுத்தியுள்ளார்.