AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் மத்திய அரசு.. குட்ட குட்ட குனிய மாட்டோம் – முதல்வர் ஸ்டாலின்..

CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், "தமிழ்நாட்டின் கோரிக்கைகள், தேவைகளை கடிதங்களாகவும், நேரில் மனுக்களாகவும், சட்டமன்றத் தீர்மானங்களாகவும் எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயம் இல்லை. குட்ட குட்ட குனிய மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் மத்திய அரசு.. குட்ட குட்ட குனிய மாட்டோம் – முதல்வர் ஸ்டாலின்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Nov 2025 15:20 PM IST

சென்னை, நவம்பர் 29, 2025: மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாக சொல்லிக்கொண்டே தமிழ்நாட்டு மக்களின் குரலை மத்திய பாஜக அரசு புறக்கணிப்பது சரியா? என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், தமிழகத்தில் எந்தெந்த பிரச்சனைகள் நிலவி வருகின்றன, எதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்பவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?

  • மாநில உரிமைகளை மதிக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்கும், ரயில் திட்டங்களிலும் நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாட்டை புறக்கணிப்பதற்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  • கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள், விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அனுமதி,
  • கலைஞர் பல்கலைக்கழக சட்டம் முன்வடிவுக்காக நாடாளுமன்றத்தில் குரம், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளை பாதுகாப்பது,
  • நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்துவது,
  • கல்வியில் காவி கொள்கையை திணிக்காமல் இருப்பது,
  • ரூ.1548.22 கோடி செமிக்ருஷ் நிதியை விடுவிப்பது,
  • நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் தொழிலாளர்களின் உரிமையை பாதிக்கக் கூடாது,
  • இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்,
  • கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிக்க நிரந்தர தீர்வு அவசியம்,
  • ஆசிரியர் தகுதி தேர்வில் (23.08.2019) பணிபுரியும் ஆசிரியர்களின் பணி மற்றும் பதவி உயர்வு பாதுகாக்கப்பட வேண்டும்,
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்காமல், தமிழ்நாட்டுக்கான ரூ.1290 கோடியை உடனடியாக வழங்க வேண்டும், இந்த ஆண்டிற்கான 30 கோடி மனிதநாட்கள் பணி அனுமதி வழங்கப்பட வேண்டும்

Also Read: வடதமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல்.. இன்றும் நாளையும் ரெட் அலர்ட்.. எத்தனை மாவட்டங்களுக்கு?

குட்ட குட்ட குனிய மாட்டோம் – முதலமைச்சர் ஸ்டாலின்:


மேலும், இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், “தமிழ்நாட்டின் கோரிக்கைகள், தேவைகளை கடிதங்களாகவும், நேரில் மனுக்களாகவும், சட்டமன்றத் தீர்மானங்களாகவும் எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயம் இல்லை. அதிக வருமான வரியை தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனசாட்சி உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளை கடந்தே தான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனியமாட்டோம்… நிமிர்ந்து நடை போடுவோம்!” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us