AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வடதமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல்.. இன்றும் நாளையும் ரெட் அலர்ட்.. எத்தனை மாவட்டங்களுக்கு?

Cyclone Ditwah: டிட்வா புயல், வடக்கு–வடமேற்கு திசையில் நகரும் போது, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளிலிருந்து — இன்று நள்ளிரவு 60 கிலோமீட்டர் தொலைவில், நாளை அதிகாலை 50 கிலோமீட்டர் தொலைவில், நாளை மாலை 25 கிலோமீட்டர் தொலைவில் இது நிலை கொள்ளக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

வடதமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல்.. இன்றும் நாளையும் ரெட் அலர்ட்.. எத்தனை மாவட்டங்களுக்கு?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 29 Nov 2025 13:47 PM IST

வானிலை நிலவரம், நவம்பர் 29, 2025: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனைஒட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் நிலவிய டிக்குவா புயல் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வேதாரண்யத்துக்கு தென்கிழக்கில் 140 கிலோமீட்டர் தொலைவில், காரைக்காலுக்கு தெற்கு – தென்கிழக்கில் 170 கிலோமீட்டர் தொலைவில், புதுச்சேரிக்கு தெற்கு–தென்கிழக்கில் 280 கிலோமீட்டர் தொலைவில், சென்னைக்கு தெற்கில் 380 கிலோமீட்டர் தொலைவில் நிலைத்து உள்ளது.

வட தமிழகத்தை நெருங்கும் புயல்:


இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30, 2025 அதிகாலை வட தமிழக –புதுவை மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடலை அடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வடக்கு–வடமேற்கு திசையில் நகரும் போது, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளிலிருந்து — இன்று நள்ளிரவு 60 கிலோமீட்டர் தொலைவில், நாளை அதிகாலை 50 கிலோமீட்டர் தொலைவில், நாளை மாலை 25 கிலோமீட்டர் தொலைவில் இது நிலை கொள்ளக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழகத்தில் கனமழை பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னைக்கு நாளை தான் மழையின் ஆட்டம் இருக்கும் – வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்..

நவம்பர் 29, 2025 — இன்று

ரெட் அலர்ட் :
செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை.

ஆரஞ்சு அலர்ட் :
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை.

கனமழை வாய்ப்பு :
கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர்.

மேலும் படிக்க: முடிவுக்கு வந்தது ஸ்டிரைக்:18 நாட்களுக்குப் பிறகு வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து இயக்கம்!

நவம்பர் 30, 2025 — நாளை

ரெட் அலர்ட் :
திருவள்ளூர், ராணிப்பேட்டை.

ஆரஞ்சு அலர்ட் :
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி.

கனமழை வாய்ப்பு :
சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர்.

டிசம்பர் 1, 2025

திருவள்ளூரில் மட்டும் கனமழை பதிவாகக்கூடும். பிற மாவட்டங்களில் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பதிவாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us