AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னைக்கு நாளை தான் மழையின் ஆட்டம் இருக்கும் – வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்..

Tamil Nadu Weather Update: காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இருந்து படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும். மிதமான மழை முதல் கனமழை வரை பதிவாகக் கூடும். நவம்பர் 30ஆம் தேதி சென்னையில் நல்ல மழை பதிவு இருக்கும்.

சென்னைக்கு நாளை தான் மழையின் ஆட்டம் இருக்கும் – வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Nov 2025 12:15 PM IST

வானிலை நிலவரம், நவம்பர் 29, 2025: இன்று அதிகாலை 02:30 மணி அளவில் இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல் வடக்கு – வடமேக்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05: 30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில் , இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு – தென்கிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை திரிகோண மலையிலிருந்து வடக்கு – வடமேற்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது, மேலும் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை (30-ஆம் தேதி) அதிகாலை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.

மேலும் படிக்க: முடிவுக்கு வந்தது ஸ்டிரைக்:18 நாட்களுக்குப் பிறகு வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து இயக்கம்!

வட கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் – பிரதீப் ஜான்:


வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் மெல்ல மெல்ல தமிழகத்தை நோக்கி நகரும் நிலையில், தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார். இது தொடர்பான தனது வலைப்பக்கத்தில், ” இந்த டிட்வா புயல் தமிழகக் கடற்கரை ஓரத்தை ஒட்டி நகரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 30, 2025 மாலை இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது.

இந்த புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில், குறிப்பாக நாகையில் 25 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயல் கடல் பகுதிகளில் இருந்தாலும், டெல்டா மாவட்டங்களில் இன்று மாலை வரை மழை தொடரும். அதனைத் தொடர்ந்து மெல்ல மெல்ல மழையின் தீவிரம் குறைந்து, படிப்படியாக கடலூர் மற்றும் பாண்டியில் மழைப்பொழிவு அதிகரிக்கும்.

மேலும் படிக்க: கனமழை எச்சரிக்கை: இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னையில் மழை படிப்படியாக அதிகரிக்கும்:

இந்த சூழலில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இருந்து படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும். மிதமான மழை முதல் கனமழை வரை பதிவாகக் கூடும். நவம்பர் 30ஆம் தேதி சென்னையில் நல்ல மழை பதிவு இருக்கும்.

கனமழை எச்சரிக்கை பொறுத்தவரையில் — திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவு ஆகக் கூடும். அதேபோல் நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் மிகக் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.

அதிக கனமழை வாய்ப்பு பொருத்தவரையில் — கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow Us